பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




|--

அப்பாத்துரையம் - 45

(182) ||. தோல்விகளிலும் பெருமை துலங்குகிறது. அவரது கவிதையில் என்றும் மாறா இளமை யுணர்ச்சியும் ஆர்வமும், விடுதலை விடாயும் வீரமும் திகழ்கின்றன. அமைந்த உணர்ச்சிகளே உடைய ஆங்கில மக்களிடை இதன் முழுஆற்றல் அறியப் படுவதில்லையாயினும் ஐரோப்பா எங்கணும் அமெரிக்காவிலும் பத்தொன்பதாம் நூற்றாண் வேறெந்த ஆங்கிலக் கவிஞரையும்விட அவரது கவிக்கே முதலிடந் தரப்பட்டது.