184
அப்பாத்துரையம் - 45
ஆங்கில மக்களிற் பெரும்பாலானவர்கள் 1500 ஆண்டுகளுக்குமுன் ஜெர்மனி நாட்டிலிருந்து குடியேறிய சாக்ஸனிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். பின்னாட்களில் கடல் கொள்ளைக்காரர்களான டேனியரும், நார்மனியரும் இங்கிலாந்துக்கு வந்து ஸாக்ஸனியர் அல்லது பழைய ஆங்கிலேயருடன் கலந்தனர். டெனிஸன் குடியினர் இங்கிலாந்தில் 9, 10 ஆம் நூற்றாண்டுகளில் வந்து குடியேறிய டேனியர் கால்வழியினர் என்று கூறப்படுகிறது. டெனிஸனின் முன்னோர்களில் ஒருவரான லான்ஸிலட் டெனிஸன் இங்கிலாந்து மக்களின் அழைப்பின் பேரில் அந்நாட்டு அரசுரிமை கோரி வந்த மூன்றாம் வில்லியமை வரவேற்றவருள் ஒருவராகக் காணப்படுகிறார்.
டெனிஸன் தந்தையாகிய டாக்டர் ஜார்ஜ் டெனிஸன் தன்னாண்மை மிக்கவராதலால் தம் சமயத்தலைவர்களுடன் முரண்டிச் சமயப்பணியை இழந்தார். இச்செய்தி அவர் வாழ்நாள் முழுவதும் அவர் உள்ளத்தில் தங்கி அவர் முகத்துக்குச் சற்றுக் கடுமையான தோற்றந் தந்தது. டெனிஸன் தாய் கடவுட்பற்று மிக்கவர். கண்கவர் வனப்புடன் பிறர் சீற்றத்தை நொடியில் மாற்றும் இன்முறுவலும் நகைத்திறமும் உடையவர். விலங்குகளிடமும் கீழின உயிர்களிடமும் 'அஞ்சிறை’ப் பறவைகளிடமும் அவர் பரிவும் இரக்கமும் உடையவர். இப்பண்பு டெனிஸனிடம் படிந்து அவர் கவிதை களிலும் காணப்படுகிறது.
ஆல்ஃபிரெட் டெனிஸன் 1809ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ல்
பிறந்தவர். அவர் தந்தைக்குப் பிள்ளைகள் பன்னிருவர் இருந்தனர்.
அவர்களுள் இவர் நான்காவது புதல்வர். இவர் உடன்பிறந்தார்களுள் சார்ல்ஸ் இவருடன் பள்ளிக்குச் சென்றவர். ஃபிரெடெரிக் இவர் சேர்வதற்கு முன்னாலேயே பள்ளியில் மேம்பட்டுத் திறமையுடையவரா யிருந்தவர். 'உடன்பிறந்தார் இருவரின் பாடல்கள்' என்ற கல்லூரிக் கால வெளியீட்டில் இம்மூவர் கைத்திறமும் உண்டு என்று கூறப்படுகிறது.
கவர்ச்சியில்
சிறுவராயிருக்கும்போதே டெனிஸன் இயற்கையழகின் மிகவும் ஈடுபட்டவராயிருந்தார். அவர் லிங்கன்ஷயரின் சதுப்பு நிலங்கள், அகன்ற கரிசல் வெளிகள், ஓடைகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றினி டையே சுற்றித்