ஆங்கிலப் புலவர் வரலாறு
185
திரிவார். அவ்விடங்களிலுள்ள பூ வகைகள், புல் வகைகள், புள்ளினங்கள் ஆகிய எல்லாவற்றிலும் அவர் ஆழ்ந்த கவனம் செலுத்தியவர். ஷேக்ஸ்பியரின் நடுவேனிற் கனவில்
குறிப்பிடப்பெறும்
மாய மலரைப் பற்றிய 'பூ' என்ற தனிப்பாடலிலும் ‘ஈனக் ஆர்டன்' போன்ற பெரும் பாடல் களில் ஆங்காங்குச் சிதறுண்டு கிடக்கும் இயற்கை ஒவியங்களிலும் இதனைக் காணலாகும்.
சிறு பருவத்திலேயே டெனிஸனிடம் காணப்பட்ட ன்னொரு பண்பு கதை கூறுவதிலுள்ள ஆர்வமாகும். டெனிஸன் கவிதைகளின் சிறந்த கூறு அவற்றில் காணும் இயற்கை வனப்புக்களும் ஓசையினிமையும், மனித உணர்ச்சிகளின் பண்பாடுமே யாகும். ஆனால், அவர் பாடல்களில் பெரும் பாலானவை சிறுகதை யுருவிலும் கதைத்தொகுதி யுருவிலுமே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஆங்கில மொழியின் தொடக்கக் காலக் கவிஞராகிய சாஸரைப் போலவோ, இத்தாலிய எழுத்தாளராகிய பொக்காச்சியோவைப் போலவோ அவர் கதைப்பாடல்கள் கதைச் சிறப்பு உடையவையல்ல; கவிதைச் சிறப்பே உடையவை. எனவே அவற்றைப்பாடற் கதைகள் என்பதினும் கதைப்பாடல்கள் என்பதே பொருத்த முடையது.
இளமையிலேயே டெனிஸனுக்குச் செய்யுள் யாக்கும் பழக்கம் இருந்தது. இதனை அவர் குடும்பத்தார் ஒரு நேரப்போக்குத் தொழில் என்று மட்டுமே கருதியிருந்தனர் என்று தெரிகிறது. அவர் பாட்டியார் உலகு நீத்தபோது பாட்டனார் அதுபற்றி ஒரு பாட்டு எழுதினால் அரைப் பொன் தருவதாகக் கூறினாராம். அத்துடன் அவர் விளையாட்டாக, நீ பாட் டெழுதிப் பொன் பெறுவது இதுதான் முதல் தடவையாக இருக்கும்; இதுவே உறுதியாகக் கடைசித் தடவையாகவும் இருக்கும்' என்றாராம். இக்கூற்றின் பிற்பகுதி எவ்வளவு பொய்யானது என்பதை அவர் அறிந்திருக்கமாட்டார். ஆல்ஃபிரட் டெனிஸனுக்குப் பிற்பட்டு அவர் புதல்வர் அவர் வாழ்க்கையை எழுதும்போது அவர் இளமையில் யாத்த சில செய்யுட் களையும் வெளியிட்டனர். அவை உயர்தரக் கவிதைகளல்லவாயினும் பருவத்தை நோக்கப் போற்றத்தக்கவை என்றே கொள்ளப் படலாகும்.