பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

187

தொடர்ப்பா (Sonnet) ஒன்றிலும் இதே குறிப்பு காணப்படுவதால் அறியலாம். அவர் பள்ளித் தோழரும் பின் நாட்களில் அவரது பெருநூலாகிய "முன்னைய நினைவு” (In Memoriam) என்பதன் பாட்டுடைத் தலைவருமான ஹாலம் என்பவர் இத் தொடர் பாவைக் குறித்துப் பேசுகையில் அதற்குக் கோல்கொண்டாவின் வைர வயல்களில் ஒன்றைப் பரிசாக அளிக்கலாம் என்று கூறினாராம். எப்படியும் வெளி உலகில் புகழ் பெறுவதற்கு நெடுநாள் முன்னரே கல்லூரி உலகிற்குள் அவர் கவிதை மாணவரால் மிக உயர்வாகப் பாராட்டப் பட்டிருந்தது என்று தெரிகிறது. எப்படியெனில், கல்லூரியின் மாணவர் கழகத்தில் உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள்களுள் 1832 ஆம் ஆண்டிலேயே “டெனிஸன் பெரிய கவிஞரா? மில்ட்டன் பெரிய கவிஞரா?” என்று தொலை நோக்குக் கொண்ட தலைப்புக் காணப்படுகிறது.

கவிதை உலகில் டெனிஸன் பேரால் முதன்முதல் வெளிவந்தது. 1827இல் இயற்றப்பட்ட ‘இரு உட ரு உடன்பிறந்தாரின் பாட்டுக்கள்' என்பதே. மேற்குறிப்பிட்டபடி இஃது ஆல்ஃபிரெட் டெனிஸனுடன் அவர் உடன் பிறந்தார் சார்ல்ஸும் ஃபிரெடெரிக்கும் கூடி எழுதியது. இதில் பெரும்பகுதி வெறும் சொல்லடுக்கானது. சில தெளிவாகவே முன்னைய பேர்போன புலவர்களைப் பார்த்து அச்சடித்தவை போன்றிருந்தன. ஆனால், இந்நூலுக்கும் இதற்கடுத்த நூலாகிய 1830ஆம் ஆண்டைய கவிதைகளுக்கும் இடையிலுள்ள மிகச் சுருக்கமான காலத்திற்குள் அவர் கவிதையாற்றல் யாவரும் வியக்கும்படி விரைவில் வளர்ச்சியடைந்தது. இப்போது அவர் யாரையும் பின்பற்றாது தனிச் சிறப்புடனும் புதுமை யுடனும் விளங்கினார். சொல் கவர்ச்சியும் பாடல் ஓசையும் இப்போதே அவர் முதல் தரக் கவிஞர் என்பதை யாவருக்கும் எடுத்துக்காட்டின. இந்நூலில் அடங்கிய 'மேரியானா,' 'அராபிய இரவுகள்' ஆகியவை செம்பாகமான பாக்களின் உருவில் படிப்பவர் மனதைக் கவர்ந்து இன்பமளிப்பவை.

3. இளமைக் காலக் கவிதைகள்

1830ஆம் ஆண்டுக் கவிதைகள் வெளிவந்ததன் பின் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக டெனிஸன் இன்னொரு கவிதைத்