பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

அப்பாத்துரையம் - 45

தொகுதியை வெளியிட்டார். இதுவே புகழ்மிக்க 1832ஆம் ஆண்டுக் கவிதைகளாகும். இந்நூலின் பாடல்களுள் பல முதல்தரமானவை. சொல்லழகின் சல்வ மிக்கவை; புலனுணர்வுக்கு இன்பம் தந்து உள்ளங் கவர்பவை; உவமையும் உருவகமும் நிறைந்து ஷேக்ஸ்பியரின் முதற்காலக் கவிதைகளையும், கீட்ஸின் கவிதைகளையும் நினைப்பூட்டுபவை. அவற்றுள் பல புனைவியலின் மாய உலகக் கவர்ச்சியும், கனாநிலையின் மயக்கமும் நிறைந்தவை. இப்பாடல்களில் ஒன்று ‘கலைக்கோயில்' என்பது. வாழ்விற்கு அப்பாற் பட்டது கலை என்ற அக்காலத்தில் புதிதாகத் தோன்றிய கலைவாணர் கொள்கையைக் கண்டிக்க எழுந்தது அது. அதிலுள்ள விரிவுரைகள் பொதுப்படத் தெளிவும் திருத்தமும் வாய்ந்தவை. சிறப்பாகச் செதுக்கு உருவங்கள் பற்றிய விரிவுரைகள் முதற்பொருளை உளக்கண்முன் திறம்பட எழுப்பும் தன்மை வாய்ந்தவை. 'மே அரசி' என்ற பாடல் இதனினும் சிறப்புடையது. டெனிஸன் பாடல்கள் எல்லாவற்றி னுள்ளும் இளைஞர் மிகுதியும் விரும்பி வாசிக்கும் நூல் இதுவே. ‘அழகிய மங்கையர் கனா' என்பதும் 'தாமரை அயில்வோர்’ என்பதும் அவ்வத் துறைகளில் ஒப்புயர்வற்ற தனிச்சிறப்பு வாய்ந்தவை. பின்னது டெனிஸன் சில ஆண்டுகளுக்குப்பின் எழுதிய யுலிஸிஸ் என்பதற்கு நேர்மாறானது. ‘தாமரை அயில்வோ'ருள்ளும் ‘யுலிஸி'ஸிலும் பாட்டுடைத் தலைவன் ஒருவனே. ஆனால், இவ்விரண்டிலுங் காணும் உலகங்களும் வேறு வேறானவை. 'தாமரை அயில்வோ' ருள் யுலிஸிஸ்

புதுமையானதோர் தீவின் பக்கமாகச் செல்கிறான்.அங்கே அப்பர் இறைவனடி நிழலினைப் பற்றிக் கூறியபடியே,

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும்.....

நிறைந்திருந்தன.மாலையும் மதியமும் என்றும் மாறாது ஒரு நிலையில் நின்ற இத்தீவில் எங்கும் தாமரைப் பொய்கைகள் நிறைந்திருந்தன. தாமரைப் பூவின் பூந்துகள் காற்றிலும் கரையிலும் நீரிலும் எல்லாம் நிறைந்திருந்தன. அதன் தெய்வீக ஆற்றலால் அந்நாட்டின் மக்களுக்குப் பசி என்பது மில்லை; பசிக்காக முயற்சி செய்யவேண்டிய நிலையுமில்லை. ஆனால்,