பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

191

பிற்பட்டபாடல்களோ, டெனிஸன் கால வாழ்க்கையையும் அக்கால மக்கள் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் படம் பிடித்துக் காட்டுபவை யாயிருந்தன. இக்காலம் விக்டோரியா அரசியாரின் ஆட்சியின் நடுப் பகுதியாகும். ஆங்கிலப் பேரரசு உலகின் பாதியைத் திறைகொண்டு வெற்றி நறவுண்டு வெறியார்ந்து இறுமாந்திருந்த காலம் அது. அறிவியல் மேம்பாட்டால் வாணிப வாழ்விலும் செல்வத்திலும் மிதந்த அக்கால மக்கள் சமயம், கலை ஆகியவற்றில் மனம் செலுத்தாது அறிவியலையும், செல்வத்தையும் மட்டுமே வழிபட்டு வந்தனர். அக்காலக் கவிஞர் எவரினும் டெனிஸனே தலைமைக் கவிஞனாயிருந்து இவ்வுணர்ச்சிகளையெல்லாம்

கலை

உருப்படுத்திக் காட்டினார். ஆனால், கால மாறுதலினிடையே இக் கருத்துக்களும் மாறின. வெற்றி இறுமாப்பு மாறிப் போர்ப் புயல்களும் குழப்பமும் ஏற்படத் தொடங்கிய காலமாகிய இருபதாம் நூற்றாண்டு முதிருந்தோறும் டெனிஸனுடைய ய பிற்காலப் பாடல்களின் செல்வாக்கும் சற்றுக் குறையத் தொடங்கின. ஆயினும் புற அழகையேயன்றி அக அழகாகிய பொருளாழத்தையும் நோக்குபவருக்கு டெனிஸனின் முற்காலக் கவிதைகள் ஆழமற்ற சொற்சித்திரங்கள் மட்டுமே யாகும். அவற்றில் கீட்ஸ், ஷேக்ஸ்பியர், கம்பன் ஆகியவர்களின் கற்பனை இன்பம் உண்டு. மில்ட்டனின் உயர்வும் பிரௌனிங்கின் செறிவும் சங்கஇலக்கியத்தின் இயற்கை நயமும் அவற்றுள் அகப் படமாட்டா. அவற்றை ஆங்காங்காக வேனும் பிற்காலக் கவிதைகளிலேயே காண வேண்டும். சுருங்கச் சொன்னால் டெனிஸனின் முற்காலக் கவிதைகள் கீட்ஸ், ஷெல்லி ஆகியவர் கள் கவிதைகளுடனும், மில்ட்டன், ஷேக்ஸ்பியர் ஆகியவர்களின் முற்காலக் கவிதைகளுடனுஞ் சேர்க்கத்தக்கவை. பிற்காலக் கவிதைகளோ மில்ட்டன், ஷேக்ஸ்பியர் ஆகியவர்களின் பிற்காலக் கவிதைகளை ஒத்தவை யல்லவாயினும் அவற்றுடன் சேர்க்கத்தக்கவையே யாகும்.

டெனிஸன் பள்ளி வாழ்வு நாட்களில் உடற்பயிற்சியில் பற்றுடையவ ராயிருந்தார் என்று மேலே கூறினோம். அதனுடன் பைரன், ஷெல்லி முதலிய கவிஞர்களின் பாடல்களிலும், அவற்றுட் கண்ட விடுதலை யார்வத்திலும் அவர் மிகவும்