பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

193

பெரிதாக்கப்பட்டது. டெனிஸன் மனத்தில் ஹாலமின் பிரிவால் ஏற்பட்ட துயரம் பல எண்ண அலைகளை ஏற்படுத்திற்று. பிற கவிஞர்கள் இத்தகைய எண்ணங்களைப் பாவாக எழுதி வெளியிட்டுள்ளனர்.மில்ட்டன் இத்தகைய நண்பர் ஒருவர் பிரிவை லிஸிடஸ் என்ற பாடலில் தெரிவித்திருக்கிறார்.ஆனால்டெனிஸன் ஹாலமின் நினைவுடன் தம் வரலாற்றையும், உலக வரலாற்றையும் விரித்துரைத்ததுடன் ஓர் இருபது ஆண்டுகளாகத் தாம் நினைத்தவற்றையெல்லாம் ஹாலம் நினைவு என்ற நூலில் கோத்து மணிக்கோவையாக்கி ஒரு பெரும் தொடர்ப்பாவைப் புனைந்தார். இதுவே 'முன்னைய நினைவுகள்' என்ற நூலாகும். டெனிஸன் காலத்திலும்,அதனை அடுத்தும் இதுவே டெனிஸனின் மிகச் சிறந்த நூலாகக் கருதப்பட்டது. ஏனெனில், இதிற் காணப்பட்ட கருத்துக்களும் உணர்ச்சிகளும் அக்காலத்துப் பொது மக்களிடையேயும், அறிவுடைய மக்களிடையேயும் பரவியிருந்த கருத்துக்களும் உணர்ச்சிகளுமாகும். ஆனால், பிற்காலத்தவர் உள்ளத்தில் இக்கருத்துக்கள் ஆழ்ந்து பதியாமல் போயின. அதனுடன் கருத்து மேம்பட்ட இடத்தில் கவிதை செறிவின்றி இருப்பதும், நெடு நீளமான இந்நூலில் கலை ஒருமைப்பாடு இல்லாதிருப்பதும் பிற்காலத்திலேயே சுவைஞரால் கவனிக்கப் பட்டன. ஆயினும் இதனினும், பிற்காலத்து நீண்ட நூல்களிலும் ங்காங்கு என்றும் நின்று நிலவத்தக்க பாடல்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள்

"பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல; கால வகையினானே”

என்ற கருத்துவாய்ந்த பாடல் ஒன்று; இன்னொன்று பாரதியார்,

"வலிமையற்ற தோளினாய்! போ, போ, போ-”

என்றும்,

"ஒளிபடைத்த கண்ணினாய்! வா, வா, வா-'

""

என்றும் பழைய பாரதத்தைப் பழித்துப் புதிய பாரதத்தை வருவிக்க எண்ணியதுபோல், டெனிஸனும்

ce

'பழைமை போ, போ என்று அடிமணியை!

புதுமை வா, வா என்று அடிமணியை!”