பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

அப்பாத்துரையம் - 45

என்ற பாடலைப் பாடினார். 1842ஆம் ஆண்டுக் கவிதைகளிற் பல 1830,1832இல் எழுதியவற்றின் திருத்தங்கள்; சில புதியவை.

கவிஞர்களில் கைதேர்ந்த கலைஞர் டெனிஸன். போப் என்ற பதினெட்டாம் நூற்றாண்டுக் கவிஞர், "புலமை என்பது புரையறுத் தொதுக்கிடும் புதுமை,” என்று கூறியது அவர் வரையில் முற்றிலும் உண்மை யாகும். தாம் எழுதிய எக் கவிதையையும் மீட்டும் மீட்டும் அவர் திருத்திக் கொண்டு தானிருந்தார். ஆயினும் உணர்ச்சி வயப்பட்ட எதிலும் அவர் திருத்தாத 1832ஆம் ஆண்டு கவிதைகள்தாம் மிகச் சிறந்தவை யென்று சுவைஞர் பலர் கூறுகின்றனர்.

புதிய பாக்களுள் சில 1830-1832ஆம் ஆண்டுப் பாக்களினும் உணர்ச்சியும், நயமும் பெற்றிருப்பதுடன், அவற்றினும் பொருள் நயமும் எளிமையும் சிறந்து விளங்குகின்றன. பலவற்றில் அவர் முன்னையினும் தெளிவான நடையும் எளிமையும் ஊட்டி, மிகையான பகுதிகளை அகற்றிப் பொருள் திட்பமும் சொற்றிறமும் அமைத்துள்ளார்.

இந்நூலின் சிறந்த பகுதிகள் ‘ஆங்கிலப் பழம் பாடல்கள், 'ஸெயின்ட் ஸைமன் ஸ்டைலைட்ஸ்', 'லாக்ஸ்லீஹால், ‘மார்ட்டி ஆர்தர்,' 'ஸர் லான்ஸி லாட்டும் கினிவியர் பேரரசியும்' என்பவையாகும். இவற்றுள் 'லாக்ஸ் லிஹால்' கோழைத்தனத்தை வன்மையாகக் கண்டித்து இளைஞரை வீர வாழ்க்கைக்குத் தூண்டுகிறது. முதியவருடைய தோல்வி மனப்பான்மையை யறைந்து கண்டித்து இளைஞர் கனாக்களைக் கனலொக்கும் சொற்களால் தீட்டுவதில் இப் பாடல் சிறப்புடையது. மார்ட்டி ஆர்தர், ஆர்தர் கதையின் கடைசிப் பகுதியாகும். பிற்காலத்தில் ‘ஆர்தரின் பிரிவு' என்ற பாடலுள் இஃது இணைக்கப் பெற்றது. கதைப்புனைவிலும் பாடல் நயத்திலும் இது 1832இல் எழுதப்பெற்ற சிறந்த பாடல்களுள் ஒன்றாகக் கொள்ளத்தக்கது. ஆர்தர் கதை முழுவதிலும் பிற்காலத்தில் மிகச் சிறந்த பகுதி இதுவே. இதற்கு அடுத்தபடியாக 'ஸர் லான்ஸிலாட்டும் கினிவியர் அரசியும்' என்ற நூல் ஆர்தர் கதைக்குத் துன்ப ணர்ச்சியும், கனிவும் தரும் பகுதியாகும். லான்ஸிலாட்டின் வாழ்வில் வீரமும் கோழைத்தனமும் போரிடுகின்றன. ஒழுக்கமும் உணர்ச்சியும் போட்டியிடுகின்றன. உணர்ச்சியும் கோழைத்