ஆங்கிலப் புலவர் வரலாறு
195
தனமும் பொய்மையின் போர்வையில் சிலகாலம் வெற்றியடை கின்றன. ஆனால், மறைந்து நின்றழிக்கும் தெய்வீகப்பழி இறுதியில் அவர்களிருவரையும் மட்டுமின்றி ஆர்தர் ஆட்சி முழுமையுமே சீர்குலைக்கின்றது.
1842லேயே டெனிஸன் புகழ் கவிதை வானில் வீறுடன் பறக்கத் தொடங்கிய தென்னலாம். அவ்வோராண்டிற்குள் அவர் கவிதைகள் நாலு முறை பதிப்பிக்கப்பட்டன. எங்கும் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியும் சொற் போர்களும் உரைகளும் நிறைந்தன. கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தேர்வுகளில் அவருடைய பாக்கள் ஒப்பிப்புப் பாடமாகவும், இலத்தீன், கிரேக்க மொழிகளில் மொழிபெயர்ப்பாகவும் பலவகையிலும்
கையாளப்பட்டன. மாணவரும் பிறரும் அவற்றை மனப்பாடம் பண்ணவும் தொடங்கினர். மேலும் அந்நாளைய பேர்போன எழுத்தாளரும் இலக்கிய அறிஞருமான கார்லைல் அவரைப் பற்றிக் கூறுகையில் 'டெனிஸன் கவிதையில் மனிதர் இதய நாடியின் துடிப்பைக் காணலாம். அரிமாவின் ஆற்றலும் குயிலின் இனிமையும் உடையவை அவர் பாடல்கள்' என்று குறிப்பிட்டார்.
ம்
1847இல் டெனிஸன் ‘இளவரசி' என்ற நீண்ட பாடல் நூலை வெளியிட்டார். இது பெண்கள் தனித்து வாழ முடியாதென்பதையும், அன்பு நிறைந்த இல்லறத்தின் மேலான நல்லற மில்லையென்பதையும் வலியுறுத்தும் கதை ஆகும். இதன் போக்கும் கருத்துக்களும் ஷேக்ஸ்பியர் நாடகங்களுள் ‘காதற்சீரழிவு' என்பதன் கதையையும் கருத்துக்களையும் நினைவூட்டுபவை ஆகும். இதில், செந்தொடையில் எழுதப்பெற்ற “கண்ணீர், வெறுங் கண்ணீர்” என்ற சிறுபாவும், “மலையினுச்சி நின்றிறங்குதி என்னரும் பாவாய்,” என்பது போன்ற பாடல்களும் மிகவும் உருக்கமானவை. "இன்னும் யாதும் நீ வேண்டற்க; எறிகடல் நிலவம், ஈர்ப்பினும்” என்பது போன்ற பாடல்களும் மிகவும் உருக்கமானவை.
5. மண வாழ்வு
டெனிஸன் தம் துணைவியாகிய எமிலி ஸெல்வுட்டை முதன் முதலாகக் காட்டிற் பயணம் செய்யும்போது கண்டார். எமிலிக்கு அப்போது 17 ஆண்டுகள். மலையும் ஓடையும் கொடி