(196) ||
அப்பாத்துரையம் - 45
செடிகளும் அமைந்த சூழலினிடையே தோன்றிய அவள் எழில் கண்டு வியந்து அவர்,
'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு”
என்ற குறளுரைக் கொத்த உரை பகர்ந்து நின்றனராம்! சில ஆண்டுகளுக்குப் பின் எமிலி ஸெல்வுட்டின் தங்கை லூயிஸாவைச் சார்ல்ஸ் டெனிஸன் மணந்தார். இதன் பின் ஆல்ஃப்ரெட் டெனிஸன் எமிலி ஸெல்வுட்டுடன் இன்னும் நெருக்கமான நட்பு கொண்டு மண உறுதியும் செய்து கொண்டார். ஆனால், மணஞ்செய்யுமுன் போதிய வருவாய் வேண்டுமென்பதற்காக அவர்கள் பத்தாண்டுகளுக்குமேல் காத்திருந்தனர். இலக்கற்ற அவர் வாழ்க்கையில் இஃது ஓர் இலக்காய் அமைந்தது.
எமிலியின் தாய் தம் சிறு குடியையும் சிறு வருவாயையும் அவர்களுடன் பங்கு கொள்வதாகக் கூறியும் அவர்கள் அதை ஏற்கவில்லை. அப்போது, 'முன்னைய நினைவுகள்' என்ற பாவின்மீது பாக்ஸன் என்ற புத்தக வணிகர் ஊதியத்தில் ஒரு பங்கு தந்தார். அஃது அவர்களுடைய மண உறுதியைப் புதுப் பித்துக்கொள்ள உதவிற்று. 1851 ஜுன் 13இல் அவர்கள் ஷிப்லேக்கில் மணம்புரிந்து கொண்டனர். மணமக்கள் மண வாழ்வில் எதிர்பார்க்கும் கனவு முற்றும் அவர்கள் வாழ்வில் நனவாயிற்று. அம் மண வாழ்வைக் குறிக்கும்போது அவர் "அவரை நான் மணந்தபோது இறை யுலகின் அமைதி என் வாழ்விற்புகுந்து குடிகொண்டது,” என்று கூறியுள்ளார்.
மண வாழ்விற்குச் சிலநாள் பின்வரை குடியிருக்க நல்ல வீடு தேடிக் கொண்டு அவர்கள் முதலில் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தார்கள். பின் அவர்கள் ஸஸ்ஸெக்ஸ் வட்டத்தில் வார்னிங்லிட் என்ற இடத்தில் அகன்ற புறவெளியை நோக்கிய காற்றோட்டமான பெரிய அறைகளையுடைய ஒரு வீட்டை வாடகை பேசி அதில் குடியேறினர். 'அதன் வாயில்களின் வழியாக வும் பலகணிகள் வழியாகவும் காற்றோடி ணைந்து பறவைகளின் இன்னிசை ஒலிகளும் வந்து எங்கள் வாழ்விற் களிப்பூட்டின' என்று அவர் அவ் வீட்டைப்பற்றிக் கூறினார். ஆயினும், திறந்த பாதுகாப்பற்ற வெளியி லிருந்த அவ்வீட்டில்