பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

197

திடீரென்று புயல் மிகுந்த ரவொன்றில் பலகணிகள் தவிடுபட்டுப் படுக்கையறைச் சுவரொன்றும் விழுந்து விடவே, இனி அதில் குடியிருத்தலாகாது என்றெண்ணினார். எண்ணி இரவோ டிரவே குளிப்பதற் காக வைத்திருந்த உருளை நாற்காலியில் மனையாட்டியை வைத்திழுத்துக் கொண்டு அவர் அப் பகுதியின் கரடுமுரடான பாதைகளினூடாகச் சென்று கக்ஃபீல்டு என்னுமிடத்தையடைந்து இறுதியில் ட்விக்கென்ஹாமில் வீடமைத்துக் கொண்டார்.

று

ஆங்கிலேயருள் உயர் குடியினர் மண வாழ்வுக்குப்பின் ஐரோப்பாக் கண்டத்தின் தென்பகுதிகளில் சென்று சிலநாள் கழிப்பதுண்டு. கதிரவன் பொன்னொளியுடன் கானாறும் ஓடையும் ஏரியும் கண்கவர் கலை மாடங்களும் கலைஞர் கூடங்களும் தேவதாரு மரங்களும் முந்திரிக் கொடிப் பந்தர்களும் நிறைந்த அவ்வழகிய நாடுகளிடையே மணமக்கள் கழிக்கும் இன்ப நாட்களை ஆங்கில மொழியில் 'தேனிலவு'க் காலம் (Honey moon) என்று குறிப்பர். டெனிஸனும் அத்தகைய தேனிலவின்பத்தை நாடி இத்தாலிக்கும் ஃபிரான்ஸு

சென்றார். மேனாட்டின் கலைக்கூடமாகிய இவ்வித்தாலி நாட்டில் தாம் கண்டுணர்ந்தவற்றையெல்லாம் எடின்பர்க் வந்தபின் எழுதிச் சேர்த்து, 'டெய்ஸி' (பொன்னிற நிலப்பூ) என்ற பாடல் ஒன்றும் வரைந்தார். இத்தாலிய நாட்டைப்பற்றிய ப்பாவை அவர் இத்தாலி நாட்டில் வழங்கும் ‘அல்கயிக்' என்ற பாவினத்திலேயே அமைத்தார். இப்பயணத்தை அடுத்த காலத்தில் இதேபோலப் பிறநாட்டுப் பாமுறைகளை ஒட்டியும், தம் மனப் பண்புப்படி தன்னாண்மையுடனும் அவர் புதுப்புதுப் பா வகைகளைக் கையாண்டார். அவற்றுள் 'விர்கில் (லத்தீனக் கவிஞர்) மீது நடனப்பா' (Ode), 'வெல்லிங்டன் பிரிவுமீது நடனப்பா' என்பவை தலைசிறந் தவை. இவற்றுள் பின்னது இலக்கண அறிஞர் வகைப்படுத்த எந்தப் பாவிலும் பாவினத்திலும் சேராமல் கண்டகண்டபடி யாக்கப்பட்ட தென்று இலக்கிய விரிவுரையாளர் அதனைச் சிலநாள் குறைகூறி எதிர்த்தனர். ஆனால், அது கண்டகண்டபடியாக்கப்பட்ட தன்று. ஒவ்வொரு வரியிலும் அமைந்த கருத்தின் பண்புக்கொத்த சந்தம் அமைத்து யாக்கப்பட்டதே என இன்று அது போற்றப்படுகிறது. வெல்லிங்டன் இப்பாவில் 'உலக வெற்றியாளனை வெற்றி