பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

அப்பாத்துரையம் - 45

கண்டவன்' என்று போற்றப்படுகிறார். உலக வெற்றியாளன் என்று இங்கே குறிப்பிட்டது வெல்லிங்டனால் இறுதியில் வெல்லப்பட்ட உலகப் பெருவீரனும், பேரரசர் கோமானுமாகிய நெப்போலியனையே யாகும்.

டெனிஸனின் அடுத்த பாடல் 'மாடு' என்பதாம். 'மாடு' என்பது மட்டில்டா என்ற பெண்பாற் பெயரின் சுருக்கம். இப்பாடலில் 'இளவரசியை' விடப் பன்மடங்கு மிகுதியாக இளைஞர் உலகின் வெறி வீறிட்டெழுகின்றது. வழக்கம் போலவே ஆங்காங்குச் சிதறிக்கிடக்கும் பாடல்களில் இது முழுவதும் கனிவுற்றுக் காணப்படுகிறது. 18 ஆண்டுக்கும் 25 ஆண்டுக்கும் இடைப்பட்டவர்கள் காதல் வாழ்விலும் புற வாழ்விலும் படும் இன்பதுன்ப உணர்ச்சிகளின் எல்லா வகைகளும் எல்லாப் படிகளும் இந்நூலில் படம் பிடித்துக் காட்டப்படுகின்றன. உலக இலக்கியத்திலேயே மிகச் சில கவிஞர்கள் மட்டுமே இயற்கைக்கு மாறான நிலையாகிய பித்தர் நிலையை உண்மைக் கொத்ததாகப் புனைந்துகூற முயன்றுள்ளனர். அங்ஙனம் முயன்றவருள் ஷேக்ஸ்பியர் ஒருவர். அவருடைய ‘ஹாம்லெத்' நாடகத்தி லுள்ள ஒஃபீலியாவின் பித்தும், ‘லியர்’ நாடகத்திலுள்ள லியர் அரசனின் பித்தும் மருத்துவ அறிஞராலும் உளநூல் அறிஞராலும் பித்தர் நிலையைச் செவ்வனே விளக்குபவை எனக் கொள்ளப் படுகின்றன.'மா'டிலும் கதைத் தலைவன் பித்துக்கொண்டலைகிறதைக் கவிஞர் தீட்டிக்காட்டுவது ஷேக்ஸ்பியருடைய காட்சிகளுக் கொப்பானது. காதல் வகையிலோவெனில் மெரிடித்தின் புனைவுக் கதையாகிய ரிச்சர்ட் பிவரிலில் மெரிடித்தின் புனைவுக் கதையாகிய ரிச்சர்ட் பிவரிலில் ‘கண்டதும் காதல்,' என்பதன் ஒப்பற்ற ஓவியம் மட்டுமே காட்டப்படுகிறது; ஆனால் ‘மா’டில் அதன் எல்லா வகை நிலைகளின் ஓவியங்களும் மலிந்து கிடக்கின்றன. அவற்றுட் பேர்போன பாடல் ஒன்றின் முதற்பா (தமிழ் மொழிபெயர்ப்பு) வருமாறு:-

காவகத்தே வாராய்! என்

கண்மணி மாடணங்கே!

கரியஇரா எனும் கூகை

கடுகி வந்ததிங்கே!