பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

காவகத்தே சாராய்! என்

கருத்திவர் மாடணங்கே! கடிவாயிலிடைத்தனியே கடைகாத்து நின்றேன்;

பூவகத்தே நறுந்தாது

போய்ப்பரவ எங்கும்

புனைமுளரி இதழ் வாடிப்

புறங்கிடந்த தன்றே.

199

ஆங்கில மொழியின் பாக்களும் பாவினங்களும் இத்தனை

வேறு வேறு நிலைப்பட்ட

உணர்ச்சிகளை எடுத்துக்

காட்டத்தக்கவையா என்று யாவரும் வியக்கத்தக்க வகையில் 'மா'டில் பல்வகை உணர்ச்சிகளுக்கியையப் பல்வகைச் சந்தங்கள் நிறைந்த பாடல்கள் காணப்படுகின்றன.

6. ஆர்தர் கதைத்தொகுதி

மில்ட்டன்

ஆங்கில மொழிக்கு விளக்கந்தரும் எத்தனையோ பாடல்கள் எழுதியும், அப் பாடல்களுக்கும் விளக்கந்தரும் பெருங்காவியம் ஒன்று எழுதுவதையே அவர் தம் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண் டிருந்தார். அதுபோலவே டெனிஸனும் தம் வாழ்க்கையின் முழு மெய்ப் பயனாம் பெருங் காப்பியம் ஒன்று எழுதவேண்டும் என்று முயன்று வாழ்நாள் தொடக்கத்திலும் இடையிலும் முதுமையிலும் பல நாட்களை அம்முயற்சியில் செலவு செய்தார். அவருடைய இப்பெரு முயற்சிக் கிலக்கானது உண்மையில் மில்ட்டன் முதலில் தெரிந்தெடுத்துப் பின் விவிலியக் கதையை எண்ணி விலக்கிய ஆங்கிலேயரின் பழம் பெருங் கதையாகிய ‘ஆர்தர் வரவும் செலவு'மே ஆகும். இதை 20 ஆண்டு எழுதுவ தென அவர் திட்டம் இட்டிருந்தார். உண்மையில் அது 50 ஆண்டுக்காலம் பிடித்தது. நீண்ட இக்கால அளவினுள் டெனிஸன் கவிதையின் இயல்பில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டன. அவற்றின் பயனாக ஆர்தர் கதையின் பகுதிகள் ஒரேமாதிரியாயிராமல், முன் எழுதியவை உணர்ச்சியும் கலைப் பண்பாடும் மிக்கவையாயும், பிந்தி எழுதியவை ஆராய்ச்சிப் போக்கு உடையவையாயும், இடைப்பட்டவை கதைப்போக்காகவும் இருக்கின்றன. ஆகவே மில்ட்டனின் துறக்க நீக்கத்தில்