ஆங்கிலப் புலவர் வரலாறு
(201
மக்கள் உயர்தர வாழ்வையும், 'தெய்வீகக் கிண்ணம்' இறைவன் அருளையும் குறிக்கும். ஆனால் இப்பொருளை நோக்காமலே கதை இன்பத்தையும் கவிதை இன்பத்தையும் ஒருவர்
துய்க்கக்கூடும்.
ஆர்தர் கதையாவது:- குழப்பமும் தீமையும் நிறைந்த பிரிட்டனில் திடீரென ஆர்தர் என்ற வீரன் வந்து அரசாட்சியைக் கைக்கொண்டு வட்டப் பலகை ஒன்றை அமைத்து அதைச்சுற்றி உண்மை, வீரம், அருள் ஆகிய வழிகளில் உலகிற்கும், சிறப்பாக, நல்லோர்க்கும், மெலிந்தோர், மெல்லியலார், ஏழைகள் ஆகியவர்கட்கும் மக்கட்பணியாற்ற உறுதி கொண்ட நூறு வீரரைச் சேர்த்து அவர்கள் வாயிலாகப் பிரிட்டானிய உலகெங்கணும் தீமையகற்றிப் புகழொளி வீசி ஆளுகின்றான். ஆனால், நூற்றுவருள் ஒருவனாகிய லான்ஸிலட், அரசி கினிவீயரிடம் கொண்ட தகா நட்பினால் இவ்வரிய தெய்வீக ஆட்சியில் இழுக்கும் குழப்பமும் ஏற்படுகின்றன. உட்பகை வனான மோட்ரெட் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்தரின் வீரரை அழித்து ஆர்தரையும் போரில் வெல்கிறான். ஆர்தர் மூன்று கன்னியரால் உலகில் கொண்டுவரப்பட்டதற் கிணங்க, அவர்களால் கொண்டு செல்லப்படுகிறான். ஆனால், உலகில் மறம் நலியும் போது மீட்டும் வருவதாகத் தன் இறுதித் தோழனாகிய பெடிவீயரிடம் அவன் கூறிச் செல்கிறான்.
7. பிற்காலப் பாடல்கள்
ஆர்தர் கதைத் தொகுதிகளை வெளியிடுவதற்கிடையில் 1864இல் ‘ஈனக் ஆர்டன்' என்ற அழகிய நெய்தல் நிலக் கவிதை ஒன்று எழுதப்பட்டது. இதில் கதை மட்டுமன்றி உரை யாடல்களும் நடையும் சொல்லாட்சியும் விரிவுரைகளும் யாவும் நெய்தல் நிலத்துக்குரிய கருப்பொருள்களிலிருந்தும் உரிப் பொருள்களிலிருந்தும் வழுவாது அமைந்திருப்பது பாராட்டுதற் குரியது. இதனுடன் திணையியல்பு மாறாத தன்மையில் ஒப்புமைப்படுத்தத் தக்க நூல் ஆங்கிலத்தில் மில்ட்டனின் ‘ஆர்க்கேடியா’வும், கிரேக்க இலக்கியத்திலுள்ள சிறந்த முல்லை நிலக் கவிஞர்களின் பாடல்களும், தமிழ்ச் சங்க இலக்கியத்தைச் சார்ந்த முல்லைப் பாட்டு முதலியவையுமே யாகும். ஆனால் மற்ற