ட
ரூசோவின் சமூக ஒப்பந்தம்
59
உயிருள்ள உடலைக் கூறிட்டுச் சேர்த்தால் உடலாகும், உயிருள்ள உடலாகாது. முழுமுதல் உரிமை உடலின் வேறான உயிர் போன்ற உயிர்ப் பண்பு ஆகும்.
முழுமுதல் உரிமை சர்வ வல்லமை உடையது. ஏனெனில் சமூக உறுப்பினர் சமூகத்துக்குத் தப்ப முடியாது. ஆனால் அது சர்வ நீதி உடையது. ஏனெனில் எல்லார் நலங்களையும் கலந்து உருவான எல்லாரது பொது நலமே அது. சமூக எல்லைக்குள் அது எல்லாம் அறிவது. ஏனெனில் எல்லார் அனுபவ அறிவும் அதை ஆக்குகிறது. அது முழு நிறை அன்புடையது. ஏனெனில் அது எல்லார் தன்னல ஆர்வத்தினையும் உட்கொண்டது. (இயற்கைச் சமயத்தில் இப்பண்புகள் உடையதாகவே தெய்வம் அல்லது கடவுள் கற்பனை செய்யப்பட்டுள்ளது.)
முழுமுதல் உரிமை வலுக் குறைந்தால், அது சமூகத்தின் பிளவு, உயர்வு தாழ்வு வேறுபாடு ஆகியவற்றின் பயன் ஆகும். சர்வ நீதி பிழைத்தல், சரிசம உரிமை பிழைப்பதாலும்; எல்லாம் அறியும் நிலையில் குறைதல், எல்லாரும்: அறிந்தாராயும் வாய்ப்பு இல்லாமையாலும், முழு நிறை அன்பில்லாமையாலும், எல்லார் ஆர்வத்தையும் சரிசமமாக நிழற் படுத்தாமையாலுமே ஏற்படும். வை சமூகத்தின் கோளாறுகள் ஆகும்.
தனி மனிதன் ஆற்றலுக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் தை வளர்க்கவே அவன் முழுமுதலில் இணைந்தான். இணைந்தபின் முழு முதலின் ஆற்றலுக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால், இதை முழுமுதல் வளர்க்க முடியும். முழுமுதலின் உரிமையே தனி மனிதன் கடமை. தனி மனிதன் உரிமை யையே முழுமுதல் அவன் கடமை ஆக்க முடியுமானால், தனி மனிதன் ஆற்றலும் வளரும். முழுமுதலின் ஆற்றலும் வளரும். குடியாட் சியை அணுகுந்தோறும் இந்த ஆற்றல் வளருகிறது. பொது உடைமையை அணுகுந்தோறும் அது இன்னும் வளர்கிறது. அன்பாட்சியை அணுகுந்தோறும் அது பின்னும் வளரும்.
தனி மனிதன் உரிமை மீது முழுமுதல் செலுத்தும் ஆட்சி அதைக் குறைப்பது போலத் தோற்றுகிறது.ஆனால் இது அதன் நோக்கம் அன்று. அவ் வாட்சியில் மிகக் கொடிய தீம்பு தனிமனிதன் உயிரை வாங்கும் உரிமையே. ஆனால் இது கூட