60
அப்பாத்துரையம் - 45
தனிமனிதன் உயிரைப் பாதுகாக்கும் ஆர்வம் காரணமாகவே ஏற்பட்டது. புலியிடமிருந்து பிள்ளையை மீட்கத் தந்தை தன் உயிரை இடருக்கு உள்ளாக்கவில்லையா? இதுபோலப் பல உயிரைப்பாதுகாக்க வேறுவழி காணாமல்,முழுமுதல் தரும் இடர் பாதுகாப்பு முறையே தூக்குத் தண்டனை! இப்பாதுகாப்புக்கு வேறு வழி கண்டால், தூக்குத் தேவைப்படாது. தனிமனிதன் உரிமை சமூக அடிப்படையாகும் எல்லையில், எந்தத் தண்டனையுமே தேவைப்படாது. தண்டனையாகிய நஞ்சு மருந்து ஆகி, மருந்து உணவாய், உணவு தின்பண்டமாய் விடும். அதன் பின் தண்டனையின் படிகள் மறைந்துவிடும். துன்பமே இன்பமாய் விடும்.
உரிமையின் பாதுகாப்புக் கடமை. கடமையின் பாதுகாப்பு சட்டம். உரிமை யறிந்தோர் திறமையுடையவர்.கடமை யறிந்தோர் தகுதி உடையவர், ஒழுக்கம் உடையவர், சட்டம் உணர்ந்தோர் அறிவுடையவர். சட்டம் உரிமையைக் கொண்டு கடமையை வலியுறுத்துகிறது. பொது உரிமையைக் கொண்டு தனி உரிமையைக் கட்டுப்படுத்துகிறது. அறிவு கலந்த அன்பு அல்லது அருள் பொது உரிமை அடிப்படையில் தனி உரிமையையும் தனி உரிமை அடிப்படையில் பொது உரிமையையும் வளர்த்து இரண்டையும் ஒன்றாக்குகிறது.
ஆகவே சட்டம் என்பது ஆதாரமும் நோக்கமும் அற்றதல்ல. கடமையை நில ஆதாரமாகக் கொண்டு உரிமை என்னும் வேரின் உதவியால் அது நிற்க வேண்டும். சமூகப் பொது நலம் என்னும் வானோக்கி அது வளரவேண்டும். எந்த அளவுக்கு அது முழு நிறைபொதுநலத்தை நோக்கிச் செல்லுமோ அந்த அளவுக்கு அது உயர்வுடையது.
ஒரு கொலைக்குத் தண்டனை, மற்றொரு கொலை! மனித சமூகத்தின் இந்த நீதி கண்டு இரக்கமும் ஏளனமும் நகைப்பும் கொண்ட அறிஞர் பலர். “சட்டம் இயற்றுபவரே அதைப் பயன்படுத்துபவர்." இந்நிலை முழுதும் பேணப்பட்டால் தண்டனை தேவைப்படாது. இந்நிலையை அணுகுந்தோறும் தண்டனையின் தேவை குறையும். ஏனெனில் தண்டனை என்பது சமூகம் தன் ஆதாரமான தனிமனிதன் வலுவைக் குறைக்கும் செயல் ஆகும்.
ஏ