ரூசோவின் சமூக ஒப்பந்தம்
61
தண்டிப்பவர் தண்டலாளர். முறைமன்றத் தலைவர். ஆனால் சட்டம் அமைப்பவர் வேறு. அவர் தகுதியும் வேறு. அவர் அறிய வேண்டுவது சட்டமன்று; மனித வாழ்வின் தேவை. இதற்கு அவர் மனிதரிடையே மனிதராக வாழ்பவராயிருக்க வேண்டும். மனித உணர்ச்சிகளுடையவரா யிருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் அவர் தனி மனிதருடன் ஒரு தனி மனிதராயிராமல், பொது மனித அவா ஆர்வங்களையும் கனவார்வங் களையும் உடையவராகவும், பொது மனிதன் நலங்களை அவாவுபவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் அவர் மனித உணர்ச்சி உடையவராயினும் அதற்கு அடிமைப்படாத வராயிருக்க வேண்டும். அவர் தன்னலம் அறிய வேண்டும்.ஆனால் பொது நலம் உடையவராயிருக்க வேண்டும். பொது நலத்தின் பகைவரான தீயவர்களைத் திருத்தும் திறமுடைய ய வராயிருக்க வேண்டும். ஆனால் அவர் தீயவராயிருக்கக் கூடாது.
சுருங்கச் சொன்னால், அவர் சட்ட அறிஞராயிருந்தால் போதாது. சமூக அறிஞராய், அன்பறிஞராய் இருத்தல் வேண்டும். அரசியல் அறிஞராய் இருத்தல் போதாது, மனித இனப்பற்றாளராய். மனித இன அறிஞராய் இருத்தல் வேண்டும்.
சட்டம் வகுப்பவரின் அருமையை மனித சமூகம் தொன்று
தொட்டு நன்குணர்ந்துள்ளது என்னலாம். ஆதென்ஸுக்கு லைகர்ஸ் சட்டம் வகுக்க எண்ணியதால் அவர் அரசுரிமையைத் துறந்தாராம். சட்டம் வகுப்பவர் நிலை அரசர் நிலையினும் மேம்பட்டதாகக் கருதப்பட்டது என்பதை இது காட்டுகிறது. அத்துடன் சட்டம் வகுப்பவர் அச் சட்டத்தைப் பயன்படுத்தும் பதவி அல்லது நிலை உடையவராயிருக்கக் கூடாது என்பதையும் மக்கள் உணர்ந்திருந்தனர். ஏனெனில் இத்தாலியும் ஜெனிவாவும் அடிக்கடி அயல் இனத்தவரையே சட்டம் வகுக்க அழைத்தன. சட்டமும் சட்டத்தை இயக்கும் பகுதியும் ஒன்றாயிருந்த தனாலேயே, உரோமப் பேரரசில் கொடுங்கோன்மை மிகுதியாயிருந்தது.
சட்டம் வகுப்பவரே சட்டத்தை இயக்குபவராகவும் இருக்கக்கூடாது என்பது குடியாட்சியின் அடிப்படைத்தத்துவம். சட்டத்தைப் பயன்படுத்து பவருள்ளும் பொது நலங்கடந்த தன்னலமோ, 'குழுநலமோ இருக்கக் கூடாது. என்பதும்,