பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ரூசோவின் சமூக ஒப்பந்தம்

63

விட மனிதன் மேம்பட்டவன். இது எதனால்? அவன் உடல் வலுவற்றவனும் அல்ல. உடல் வலுவையே நம்பியிருப்பவனும் அல்ல. இந்நிலையே அறிவை வளர்க்கும் நடுநிலை அல்லது செவ்வுநிலை. சமூக நிலையிலும் சட்டங்களிலும் இதே போன்ற செவ்வுநிலை தலைசிறந்த பண்புடையது. கூடிய அளவு மிகுதி யான தனி மனிதன் சுதந்திரம், அதனடிப்படையில் கூடிய அளவு மிகுதியான கட்டுப்பாடு - இதுவே சமூகத்தின் செவ்வி. கூடிய மட்டும் குறைந்த தண்டனை. கூடிய மட்டும் கூடுதலான பொதுநலம் பரப்பு - இதுவே சட்டத்தின் செவ்வி. தன் உரிமை, தற்பண்பு விடாது, பொது உரிமை, கடமை பேணுதல் - இதுவே தனி மனிதன் உயர் சமூகப் பண்பின் செந்நிலை.

சமூகம் விரியுந்தோறும் தனி மனிதன் பெறும் சமூக நலன் உயர்கிறது. ஆனால் சமூகம் விரியுந்தோறும் தனி மனிதனுக்கும் அதற்கும் உள்ள தொலை பெருகுகிறது. இதனால் தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடைப்பட்ட உயர்வு தாழ்வுக் குழுக்கள், வேறுபாட்டுக் குழுக்கள் ஏற்பட வழியுண்டு. ஆகவே தனி மனிதன் வலுவுக்கேற்ற விரிவும் அவன் பற்றார்வத்துக்கேற்ற குறுக்கமும் சமூக விரிவெல்லையின் செவ்வி ஆகும்.

மொத்தத்தில் ஒற்றுமை கெட்ட பரந்த எல்லையைவிட ஒன்றுபட்ட சிறு இன எல்லையே விரும்பத்தக்கது.பேரரசுகள், வல்லரசுகள் வீழ்ச்சிக்கு அவை அவாவிய பேரெல்லையே காரணம். உண்மையான பேரெல்லை விரும்புபவர் சமூக அளவைப் பெருக்குவது தவறு. தனி மனிதர் கூட்டுறவால் அமையும் கூட்டுச் சமூகத்தையே அவர்கள் விழைதல் வேண்டும்.

சரிசமத்துவமில்லாத சமூகங்கள் தம் உட்கோளாற்றை மறைக்க மற்ற சமூகங்கள் மீது தாக்குதல் செய்கின்றன. இது பேரரசரின் ஆட்சி ஆதிக்க வடிவில் அமையலாம். அல்லது வல்லரசின் அரசியல் ஆதிக்கமாயிருக்கலாம். அல்லது பொருளாதார ஆதிக்கமாயிருக்கலாம். ஆனால் சமூக நலனை எதிர்த்த தனி மனிதன் நலன் நீடித்து இருக்க முடியாது. அதுபோலவே சமூகத்தின் நலனை எதிர்த்த குழுநலனோ, ஒரு சமூகத்தின் நலனெதிர்த்த மற்றொரு சமூக நலனோ நீடித்திருக்க முடியாது.