பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ரூசோவின் சமூக ஒப்பந்தம்

65

சட்டங்களின் உள்ளுறை உள்ளுறை பொது நலமே. ஆனால் பொதுநலம் என்றால் என்ன? இரண்டு சொற்களில் அதைத் தொகுத்துக் கூறலாம். சுதந்திர உரிமை! சமத்துவம்! இவையே அச்சொற்கள்.

சுதந்திர உரிமை என்பது பொது உரிமைக்கு உட்பட்ட மிகக் கூடுதலளவான தனிமனித உரிமை ஆகும். சமத்துவம் என்பது ஒரே மட்ட நிலை, அல்லது மட்ட நிலை பேணுதல் என்பதன்று. சட்டங்கள், அரசிய லமைப்பு முறை ஆகியவை எல்லாருக்கும் சரிசம வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். அத்துடன் கடமையும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சரிசமமாயிருக்க வேண்டும். மிகுதி கடமையாற்றுபவனுக்கு மிகுதி உரிமை இருக்க வேண்டும். கடமையாற்றுபவன் உரிமையைச் சட்டம் கடமை யாற்றாதவனுக்குக் கொடுப்பது அநீதி. ஏனென்றால் அது அவன் கடமை யார்வத்தைக் குலைத்துச் சமூகத்தை நலிய வைக்கும்.

சட்டங்கள் நாட்டின் வாழ்வுக்கு வழி காட்டும். நாட்டின் தனிப் பண்புகள் வளர்வது இதனாலேயே. இத்தனிப் பண்புகள் நாட்டின் நிலைக்கு ஏற்றதாயிருக்கவேண்டும். ஸ்பார்ட்டா நகர மக்கள் பகைவரிடையே வாழ்ந்தனர். போரில் மிக ஆபத்தானது பாதுகாப்புப் போர். ஏனென்றால் அது எப்போதும் போருக்கு ஆயத்தமாயிருக்கும் நிலைமையைக் கோருகிறது. இதனால் ஸ்பார்ட்டா நகர மக்கள் உடல்வலு வளர்த்தனர். உரோம நாடு உழையாதவர் ஆதிக்கமுடைய நாடு. ஆதிக்கப் போராலேயே அது வாழ முடியும். ஆகவே அது மக்கள் வலுவைப் பெருக்காமல், படை வலிமையைப் பெருக்கிற்று. நில வளமில்லா அதேனியர் கலை வளர்த்தனர். கடற்கரையோரம் வாழ்ந்த கார்த்தெஜினியர், டயர் நகர மக்கள் ஆகியவர்கள் கடல் வாணிகம் வளர்த்தனர். ஒற்றுமைக்கு வகையற்ற சிதறிய வாழ்வுடைய அராபியர், எபிரேயர் சமயம் வளர்த்தனர். இவ்வெல்லா மக்கட் குழுவின் சட்டங்களும் அவரவர் பண்பாட்டு வளர்ச்சியிலேயே நின்றனர்.

சட்டங்களின் வகைகள் பல. அவை எந்த எந்தச் சமூகக் கூறுகளை இணைக்கின்றன என்பதைப் பொறுத்தது அவற்றின் வகை பேதங்கள். ஆள்பவர் தொகுதியும் ஆளப்படுபவர் தொகுதியும் உண்மையில் ஒன்றே. ஆயினும் இருநிலைப் பண்புகளும் வேறு. ஆட்சிக் கூறு, மக்கட் கூறு ஆகிய இரண்டின்