ரூசோவின் சமூக ஒப்பந்தம்
69
ன்னொரு வகையாகக் கூறினால் முழு முதல் உரிமை உடைய சட்ட வகுப்புக்குழு விரிவுபட்டிருக்குந் தோறும், அதாவது அது மக்கள் விருப்பத்தைத் தழுவுந் தோறும், ஆட்சி வலுவுடையது. அதே சமயம் நடைமுறை யாட்சித் துறை குறுகுந்தோறும், அதாவது அது மக்கள் விருப்பத்தைத் தழுவாது விலகுந்தோறும், ஆட்சி வலுவற்றது.
நடைமுறை ஆட்சியில் எப்போதும் பிரதிநிதித்துவம், தொகை இரண்டையும் விட, திறமையே மிகுதி கருதத் தக்கது. எனவே இதன் அடிப்படையில் வலுவான ஆட்சிமுறைக்கும், நல்லாட்சிமுறைக்கும் வேறுபாடு இல்லை. ஆயினும் அரசாங்க முறையில் நடைமுறை ஆட்சியாளரும் சட்ட வகுப்பாளரும் ஒரே அரசாங்கமேயாகின்றது. எனவே தான், ஆட்சி முறை வேறுபாடுகள் யாவும் சட்ட வகுப்புத் துறை, நடைமுறை ஆகிய இரண்டும் சார்ந்தவையாகின்றன.
து
5
எல்லா மக்களும் அல்லது எல்லா மக்களின் பிரதிநிதிகளும் ஆட்சி செய்யும் ஆட்சியே குடியாட்சி (Democracy) ஆட்சி செய்பவர் சிலரானால் அது சில குடியாட்சி (Oligarchy) அல்லது உயர் குடியாட்சி (Aristocracy) ஆகும். அது ஒரு மனிதனானால் அது முடியாட்சி (Monarchy) ஆகும்.
இப் பெருங் கூறுகளுள் சிறு பிரிவுகள் உண்டு. அவை ஒரு வகையிலிருந்து அடுத்த வகை நோக்கிச் செல்லும் படிகளாக உள்ளன.
சட்டத்தை ஆக்குபவர்களே அதனைக் கையாளவும் அதன் பொருள் விளக்கவும் சிறந்தவர்கள். இது உண்மையானால், சட்ட வகுப்பு, சட்டத்தீர்ப்பு, நடைமுறை ஆட்சி மூன்றும் ஒன்றாயிருக்கலாம். குடியாட்சியில் இம்மூன்றும் தொடர்பு படுத்தப்படுகின்றன.
உண்மையான குடியாட்சி அரிது. ஏனென்றால் எல்லாரும் அரசியலில் அக்கறைகொள்ளும் அளவு அது சிறிதாயிருக்க வேண்டும். இரண்டாவது அதில் மக்களிடையே உண்மையான பழக்கவழக்கக் கருத்தொற்றுமை இருக்கவேண்டும். அதனுள் சரி நிகர்நிலை இருக்க வேண்டும். ஒருவருக் கொருவர் உயர்வுதாழ்வு, ஆதிக்க அடிமைத் தொடர்பு ஆகிய கியவை சரிசம நிலையை