70
அப்பாத்துரையம் – 45
அழித்துவிடும். தவிர, போர் முதலிய நெருக்கடி நிலையில் குடியாட்சி செயல் திறம் உடையதாயிராது.
பல
நாடுகளில் தொல்பழங்காலக் குடியாட்சிக் காலங்களில் குடும்பத்தில் மூத்தவர் ஆண்டனர். இளையோர் அவ்வாட்சியிலடங்கி அவர்களை வாளாது பின்பற்றினர். நாளடைவில் மூத்தோர் வழிவந்த சில குடிகள் உயர்வு பெற்று உயர் வகுப்பாயின. உயர் வகுப்பாட்சி ஏற்பட்டது.
திறமையுடைய தனி மனிதன் ஆட்சியைக் கைப்பற்றி, அவன் வழியில் ஒரு மனிதன் ஆட்சி ஏற்பட்டபோது, அது முடியரசாயிற்று.
குடியாட்சியிலுள்ள குறைகளைவிட உயர் குடியாட்சி யிலும் முடியாட்சியிலும் ஓர் அடிப்படைக் குறைபாடு உண்டு. திறமை பிறப்படிப் படையாக என்றும் அமைவதில்லை. உயர்குடி திறமையற்ற இறுமாப்புக் குடியாவது இயல்பு. திறமையற்ற முடியரசன், திறமையில் பயிற்சி கூடப் பெற முடியாத முழு மூடனாக இருக்கும் நிலை ஏற்படுவதுண்டு.
ஆனால் வரலாற்றின் போக்கில் எல்லா ஆட்சி முறையிலும் எல்லா அரசாங்க முறையின் கூறுகளும் உண்டு. அத்துடன் குடியாட்சிக் கால அடிப்படைச் சட்டம் உயர் குடியாட்சி, முடியாட்சிக் காலங்களிலும் தொடர்ந்துள்ளது.
குடியாட்சி, உயர் குடியாட்சி, முடியாட்சி, இம்மூன்று கூறுகளும் கலந்த ஆட்சி ஆகிய நான்கு வகை ஆட்சிகளிலும் மிக நல்ல ஆட்சி முறை எது?
மக்கள் பண்புக்கேற்றதும் கூடியமட்டும் சிக்கலில்லாது எளிதில் செயலாற்றத்தக்கதுமான ஆட்சிமுறைதான் நல்லாட்சி முறை ஆகும். ஆகவே நல்லாட்சி என்பது ஆட்சி முறையை மட்டும் பொறுத்ததன்று. அந்தந்த மக்கள் பண்புக்கியைய அவரவர்கள் வாழ்வை வளப்படுத்தத் தக்க ஆட்சியே நல்லாட்சி என்னலாம்.
ஆனால் பொதுவாக நடைமுறையாட்சித் துறையும் (Executive) சட்ட நடைமுறையாட்சித் துறையும், (Judiciary) இரண்டும் சட்டவகுப்புத் துறைக்கு (Legislature) உட்பட்டிருக்கும் ஆட்சி முறையே நல்லாட்சி என்று கூறலாம்.