ரூசோவின் சமூக ஒப்பந்தம்
குடியாட்சியிலிருந்து
71 உயர் குடியாட்சி, உயர்
குடியாட்சியிலிருந்து முடியாட்சி என்ற போக்கில் ஆட்சிமுறை செல்லுமானால், அது ஆட்சி முறையின் அழிவு என்று கூறலாம். ஆனால் இதைவிட மோசமான அழிவு ஒன்று உண்டு.சட்டங்கள், திட்டங்கள் கைவிடப்பட்டு. ஆட்சியாளர் தன்னலக் குழுவாய் விடக்கூடும். இங்கே ஆள்பவர் ஆளப்படும் நாட்டவரானாலும், வெளி நாட்டவர் போலாகி விடுகின்றனர். மக்கள் நலன் வேறு, ஆள்பவர் நலன் வேறு ஆகிவிடுகிறது. பொது உரிமை நாளடைவில் ஒரு சிலர் தனி உரிமையாகிப் பின் ஒரு குழு உரிமை ஆகி விடுவது உண்மையில் வெளி நாட்டவராட்சியை விட மோசமானது. ஏனெனில் வெளி நாட்டவராட்சியில் எல்லாரும் அடிமைப் படுவர். ஒரே வகை அடிமைத் தனத்தில் சமத்துவப் பண்பு உண்டு. இது நாளடைவில் அடிமைத் தனத்தை ஒழிக்கும் பண்பு ஆகிவிடும். ஆனால் தனி நலன்கள் சரிசம நிலையைக் குலைக்கும். தனி நலன் குழு நலனாகப் பெருகினால் கூடத் தீமை குறையாது, கூடவே செய்யும். சரிசம நிலையில்லாத போது பெரும்பான்மை ஆட்சி கூடத் தாங்க முடியாத கொடுங்கோன்மை ஆகிவிடும்.
அரசாங்கத்தின் அழிவு அரசியல் சமூகத்தின் அழிவல்ல. அரசாங்கங்கள் தம்மையே அரசியல் சமூகமாகக் கருதுவதுண்டு. இதனால் தம் பகைவரைச் சமூகப் பகைவராக அவர்கள் தண்டிப்பதும் உண்டு. ஆனால் ஒரு அரசாங்கத்தின் பகைவரே அடுத்த அரசாங்கமாக அமைய முடியும். அரசியல் சமூகப் பகைவர் என்றும் பகைவராகவே இருப்பர். அதாவது அரசாங்கத் துரோகிகள் எல்லாரும் தேசத் துரோகிகள் அல்லர். ஆனால் தேசத்துரோகிகள் எல்லாரும் அரசாங்கத்துக்கும் துரோகிகளே.
சட்டப்படி ஆளும் அரசாங்கம் அல்லது அரசனே அரசியல் சமூகம் ஏற்கும் அரசாங்கம் அல்லது அரசு. போரில் வென்ற அரசன்கூட இதற்கு விலக்கல்ல. வெற்றி கொண்ட பல அரசர் இதனை உணர்ந்து செயலாற்றியுள்ளனர். சட்டத்தை மீறுபவரே தகா அரசர் (Usurper).
அரசாங்கத்தின் வாழ்வு அதன் வலுவைப் பொறுத்தது. ஆனால் அரசாங்க வீழ்ச்சிகளையும் மாறுதல்களையும் கடந்து அரசியல் சமூகம் வாழ்வது அச் சமூகத்தின் பண்பைப் பொறுத்தது. ஆனால் அரசியல் சமூகம் மக்கள் சமூகமாக, அது