பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

அப்பாத்துரையம் - 45

து

கடந்த மக்களாக, கலைவு பெறக்கூடும். இது படை யெடுப்பு, உட்குழப்பம், சட்டச் சீரழிவு ஆகியவற்றால் நேருவது.

ஏற்ப

உறுதியான தற்பண்பு, சூழ்நிலைகளுக்கு நெகிழ்ச்சியடையும் ஒப்புரவுப்பண்பு ஆகியவற்றின் கூட்டுறவே நீடித்த சமூக, அரசியல் சமூகப் பண்பு ஆகும்.

சார்ந்தது.

ஆட்சியுரிமை சமூக முழுமுதலைச் அரசியலமைப்புச் சட்டம் அம் முழுமுதலின் உரிமையை அரசாங்கத்துக்கு அளிக்கிறது. அரசாங்கம் தன் திறமையால் நடைமுறையாட்சி செய்கிறது. ஆனால் வலுவான ஆட்சிக்கு அடிக்கடி முழுமுதலின் ஆதரவு தேவை. வேண்டும்போது மக்கள் பேரவை கூட்டப்பெறுகின்றன. தவிர, குறிப்பிட்ட தவணையில் மக்கள் பேரவைகள் கூடும்படி ஒழுங்குமுறைகள் ஏற்பட்டுள்ளன. ஆட்சியாளர் உண்மையான ஆட்சியுரிமைக் குழுவை இங்கே சந்திக்கின்றனர். அக் குழுவில் ஒவ்வொருவரும் - உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் நடைமுறை யாட்சியில் அரசாங்கத்தின் குடிகள்தான்; ஆனால் இப்போது இங்கே அவர்கள் அரசாங்கத்தின் தலைவர்கள்.

பெரிய அரசியல் சமூகத்தில் முழுமுதற் குழுவின் எல்லா உறுப்பினரும் ஆட்சியாளரைச் சந்திக்க முடியாது. ஆகவே அவர்கள் பிரதிநிதிகளை அனுப்புகின்றனர். ஆட்சியாளருக்கும் மக்களுக்கும் இடையே இவர்கள் இடையீட்டாளர் ஆகின்றனர்.

இடையீட்டாளர்

மக்களின் நிலையான

முழுப் பிரதிநிதிகள் அல்லர். தற்காலிகக் குறைநிலைப் பிரதிநிதிகளே. காலாகாலத் தேர்தலும், வேறு வகை மக்கள் தொடர்புகளும் இதனால் குடியாட்சியில் தேவைப் படுகின்றன.

(கட்சிகள், பத்திரிகைகள், சுதந்திர நிலையங்கள் ஆகியவை

இத்தகையவை.)