பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 45

ஆட்சி செய்யும் அரசாங்கத்தை ஒழிக்கவும், ஆட்சி முறையையே மாற்றவும் ஆட்சியுரிமைக் குழு முற்படுவது உண்டு. இதனாலேயே கிளர்ச்சியும் புரட்சியும் ஏற்படுகின்றன.

ஆனால் ஆட்சியுரிமைக் குழுவின் உரிமை, சமூகப் பொதுஉரிமை. சமூகம் அழிந்தாலன்றி அது அழியாது.

தேர்தல்கள் வாக்குரிமையாலும் சீட்டெடுப்பாலும் நடக்கலாம். திறமை தேருமிடத்தில் வாக்குரிமை நல்லதன்று. ஆனால் எல்லாரும் ஆட்சியுரிமை பெறச் சீட்டெடுப்பு நல்லமுறை கலாம், பல இடங்களில் சீட்டெடுப்பு, தேர்தல் ஆகிய இரண்டுமே நடைபெறுகின்றன.

தேர்தல் முறைகள், மன்றத்தின் உறுப்பினர் மொழியுரிமை முறைகள், மன்றங்களின் வகைகள், நடைமுறைகள் ஆகியவை பலவகையாக நிலவுவதுண்டு. உரோம் நாட்டில் தேர்தல் தொகுதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டன. அவ்வக் காலச் சூழ்நிலையையும் ஆட்சியாளர் தன்னலத்தையும் இவை ஒருங்கே அடிப்படையாகக் கொண்டன. ஆனால் உரோமரின் தன்னலம் அறிவும் பெருமிதப்பண்பும் உடையது. அவர்கள் உலகை ஆண்டனர். தம் நாட்டையும் ஒரு உலகாகக் கருதி மக்கள் உணர்ச்சிகளின் போக்குக்கெல்லாம் விட்டுக்கொடுத்து, அதே சமயம் அவர்களை ஆட்சியில் ஈடுபடுத்தி, அமைப்பு முறை மூலமே அவர்கள் சக்தியைத் தம் விருப்பப்படி இயக்கினர்.