பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 45

ஆனால் யூதர்கள் அரசிழந்த பின்பும் தங்கள் விடுதலை யார்வத்தால் குலதெய்வங்களை விடாப்பிடியாகக் கொண்டிருந்தனர். து அக்கால உலகுக்குப் புதிது. நாட்டெல்லைக்குள் ஆண்ட நாட்டுத் தெய்வம் நாடுகடந்த மக்கள் தெய்வம் அதாவது குலதெய்வமாகச் செயலாற்றிற்று. கிறிஸ்துவ சமயம் இதனினும் புதிதாக அக்கால மக்களுக்குத் தோற்றி யிருக்க வேண்டும். இயேசு குறிப்பிட்ட தெய்வீக அரசு உண்மையிலேயே ஒரு வருங்கால நில அரசு என்று கருதித்தான் கிறிஸ்தவரை அக்கால உரோமப் பேரரசர் இரகசியப் புரட்சிக்காரர் என்று கருதினர்.

அரசியல் வேறு, சமயம் வேறு என்ற வேறுபாட்டைப் புகுத்திய முதல் சமயம் கிறிஸ்துவ சமயமே.

சமயமே அரசியலாயிருந்தபோது நாட்டெல்லை கடந்து நாட்டு இனம் வளர முடிந்தது. கிறிஸ்துவ சமயம் இந்நிலையை மாற்றியது. இன்று வரை கிறிஸ்தவ நாடுகள் தத்தம் தனிப் பண்பு பேணி வேற்றுமை காத்து வருகின்றன. சமய ஒற்றுமை அரசியல் ஒற்றுமை ஆகவில்லை.

என்ற

சமயம் வேறன்று, அரசியல் வேறன்று கொள்கையினிடையே எழுந்த சமயம் இஸ்லாம். ஆனால் முகம்மது நபி ஒரு நல்ல அரசியலையும், ஒரு நல்ல சமயத்தையும் திறம்பட இணைத்து ஒன்றுபடுத்திக் காட்டினார். தொடக்கக் கலிபாக்கள் கால முழுவதும் அது திறம்படச் செயலாற்றிற்று. ஆனால் அராபியர் பிறநாட்டவர் கைப்பட்டபின், சமயம் வேறு, அரசியல் வேறு என்ற பிரிவினை தலைதூக்கிற்று. 'அலீ'யின் சமயக் கலையிலும் பாரசீகத்திலும் இதைக் காண்கிறோம்.

L

சமயம் வேறு, அரசியல் வேறு என்ற நிலை ஏற்படும்போது, அரசியலை விடச் சமயம் மிகுதி ஆதிக்கம் நாடுவது ஆகும். அரசியலின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட உரிமைசமயத்துக்கு இருக்குமிடங்களி லெல்லாம், சமயத் தலைவர்கள் நாட்டின் ஆட்சிக்குள் ஆட்சியமைத்து அரசியலைச் செயலற்ற தாக்கி விடுகின்றனர். அரசியலாட்சிக்கு உட்பட்டிருக்கும் இடங்களில் அவர்கள் அந்த அரசியலின் ஆதிக்கத் தன்மையைப் பெருக்குகின்றனர்.