78
அப்பாத்துரையம் - 45
அரசியல் வளர்ச்சிக்கும் குந்தகமானது. அது அறிவுக்குப் பதில் நம்பிக்கையை வளர்க்கிறது. தூய ஒழுக்கப் பற்றுக்குப் பதில் வினைமுறைகளை வற்புறுத்துகிறது. ஒற்றுமைக்கு மாறாக வேற்றுமையையும், சமரசத்துக்கு மாறாகச் சகிப்பற்ற தன்மையையும் வளர்க்கிறது. பல வேளைகளில் சமயம் தன் குறுகிய எல்லைக்கு வெளியில் தயக்கமின்றிக் குருதியாறு பெருக்குகின்றது.
இரண்டாவது வகையிலும் மூன்றாவது வகை கேடு பயப்பதென்று கூறத் தேவையில்லை. விவிலிய நூலின் சமயம் அல்லது உண்மையான கிறிஸ்துவ சமயத்தில் மேற்கூறிய கூறுகள் இருக்க முடியாது. அது தனி மனிதர் சமயம், அது தனிமனிதன் ஒழுக்கத்தை உயர்த்தி அவனை நல்ல குடியுறுப்பின னாக்கும். ஆயினும் அனைவரும் நல்லோராயில்லாத விடத்தில், ஒரு கொடுங்கோலன் இருக்குமிடத்தில், இந்தக் கிறிஸ்துவ நெறி அதை எதிர்த்துப் போராடும் பண்பாய் இயங்கமாட்டாது. சமூக சமயமாகிய கிறிஸ்துவ நெறியே அவ்வகையில் செயலாற்ற முடியும். ஏனெனில் அது சமய ஆட்சியாளராகிய சமயத் தலைவர்களின் சமயம், அரசியலுடன் போட்டியிடும் மனப்பான்மை அதற்கு உண்டு.
சமயம் அரசியலுக்கு முற்பட்டது. ஆகவே சமய அடிப்படை முற்றிலுமில்லாத அரசைக் காண்பதரிது. மன்னர் உறுதிமொழியில் இது இன்னும் டம் பெறுகிறது. ஆனால் சமய ஆட்சி, அரசியல் ஆட்சி வேறு பிரிக்கப்படாத பழங்கால எளிய சமயமே இது. இது ஒப்பந்தத்துக்குப் புறம் பாயும், ஒப்பந்தம் செய்யும் சமூகத்தில் ஒற்றுமை, ணக்கம் ஆகியவற்றைப் பேணுவதும் ஆகும். அது ஒப்பந்தத்துக்கு முந்திய நாகரிகப்படியின் எச்சமிச்ச மரபு. இதில் கடவுள் சமூக ஒற்றுமையின் சின்னம். மேலுலகம் என்பது வருங்காலத் தலைமுறைகளின் நல்வாழ்வு. பழி என்பது சமூகத்துக்குக் கேடு பயக்கும் செயல். மொத்தத்தில் இந்த அரசியற் சமயம் அரசியலுக்கு இன்றியமையா அடிப்படையான சமூக ஒழுக்கத்தைத் திறம்பட வகுக்கிறது.
ய
குடியாட்சியின் அடிப்படையான இந்தச் சமூக ஒழுங்கு முறை அல்லது இயற்கைச் சமயத்தில், கடவுள் எல்லாருக்கும் ஒரே