பக்கம்:அமர வேதனை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அருள்வாய் அண்ணலே!

விஞ்ஞான மேதையே!

ஆக்கவும் அழிக்கவும்

காக்கவும் திறன் பெற்ற

இந்நாளைக் கடவுளே!

பூலோக பிரமனே!

உனக்கொரு வேண்டுகோள்


விலைவாசி உயர்வினால்

பொருள் இல்லாக் குறையினால்

பட்டினி நிலையே

எங்கும் பெருகுது

பணம் பற்றா நிலையினால்

மக்கள் தவிக்கிறார்.

பசியின் கொடுமை

நெடுகிலும் பரவுது.

பசிக்கு உண்டிடப்

பொருள்களும் கிடைக்கலை!

பணமும் பற்றலை!


ஆதலின்,

கலியுகக் கடவுளே!

கண்டருளுக உடனே

வயிற்றுத் தொல்லையை

அவ்வப்போது தணித்திட

பில்ஸோ,காப்ஸ்யூலோ,

திரவமோ எதுவோ

உடனே தேவை.


வல்லிக்கண்ணன்
13
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/15&oldid=1186121" இலிருந்து மீள்விக்கப்பட்டது