பக்கம்:அமர வேதனை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சென்னை வந்த சிவன்

சென்னைக்கு வந்த சிவமானான்

அன்றொரு புலவன்

சென்னைக்கு வந்தான்,சிவமானான்!

சென்னைக்கு வந்தேன்,என்னானேன்?

இன்று நான்

சென்னைக்கு வந்து என்னானேன்?


வெண்பொடி போர்த்த மேனி

சடைபட்ட கூந்தல்

மண்பட்ட ஆடை பூண்டான்

பித்ததெனத் திரியும் சிவமானான்

தமிழைப் போற்றிய புலவன்.


ஓட்டல் தோறும்,

உணவெனும் பெயரில் கண்ட

நஞ்சையே தின்னக் கற்றேன்.

வீதிகள் திரியக் கற்றேன்;

வெறிநோக்கும் பெற்றேன்.

உடலெனும் பேரில்

எலும்புகள் சுமந்து நின்றேன்

எதையும் எண்ணிச்

சிரித்தல் கற்றேன்.

இவையும் சிவனின் பண்புகள் தானே!


1971
வல்லிக்கண்ணன்
23
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/25&oldid=1203724" இலிருந்து மீள்விக்கப்பட்டது