பக்கம்:அமர வேதனை.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிஞர் ஆந்தை
(ஆங்கிலப் பாடல் ஒன்றின் கருத்தை தழுவியது)

ஆந்தை ஒன்று
மரத்தில் இருந்தது.
அறிஞர் ஆந்தை
அதிகம் பார்த்தது.
பார்க்கப் பார்க்க
கூச்சல் குறைத்தது.
கூச்சல் குறையவும்
கூரிய காதால்
அதிகம் கேட்டது.
அதனால் பின்னர்
உன்மை தெரிந்தது,
தன்னே அறிந்து,
உலகை உணர்ந்தது.
பேச்சை வளர்க்கும்
பெரியவர் பலரும்
ஆந்தையை போல
ஆழ்ந்து அடங்கிடில்
அமைதி வளரும்
உலகம் உய்யுமே!

1968

வல்லிக்கண்ணன்

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/37&oldid=1278906" இலிருந்து மீள்விக்கப்பட்டது