பக்கம்:அமர வேதனை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உள்ளத்தில் அரிப்பு.

ஊர் சுற்ற வேணும்!

சட்டையோ கிழிசல்

புகழை சட்டையாக

அணிய முடியுமா?


தெருவில் போனால்

தார் ரோடு பொசுக்குது.

புகழ் செருப்பு ஆகுமா?

கடும் வெயில் தாக்கி

மூளை குழம்புது:காத்திட

புகழ் என்ன குடையா?


குளிர் இரவில்

பனிக் காற்று

உடலை வாட்டுது.

புகழ் போர்வை இல்லையே!


பார்க்கப்போனால்

வெறும் புகழில்

என்ன இருக்கிறது?


1966
அமர வேதனை
38
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/40&oldid=1206963" இலிருந்து மீள்விக்கப்பட்டது