பக்கம்:அமர வேதனை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
'எக்ஸ்'?

அறியாப் பொருளே

'எக்ஸ்'எனக் கொள்வோம்

என்றே கூறும் கணிதம்.

வாழ்க்கையில்

மனிதன் தேடும்

எக்ஸ் தான் என்ன?


பணமே எக்ஸ்

என்பது பலப்பலர் தீர்ப்பு.

புகழே எக்ஸ்

என்பர் சிலரேயல்லர்.

எக்ஸ் என்பது

இன்பமே யாகும்;

பணம்,புகழ்,பதவி,பட்டம்,

சொத்து,சுகம்,சோம்பல்,அமைதி,

ஸெக்ஸ்,ஆனந்தம்

எக்ஸ் என்று

எதெதையோ விடையாய்

கணக்கிடும் மனிதர் கூட்டம்!


வாழ்க்கைக் கணக்கின்

விடைதான் என்ன?

கணக்கைக் கொடுத்த

வாத்தியைக் காணோம்.

தெளிவுபெற முயன்றோர்

விளைப்பது குழப்பம்.

50
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/52&oldid=1191019" இலிருந்து மீள்விக்கப்பட்டது