பக்கம்:அமர வேதனை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குருட்டு ஈ

ஒளி நன்று;ஒளியே அமுதம்

அது இனியது;வாழ்வு தருவது

உண்மை;நான் மறுக்கவில்லை.


வெள்ளம் பெருகி ஓடினும்

நாய் நக்கியே குடிக்கும்.

வெள்ளமாய் ஒளி

வெளியை நிறைக்கிலென்?

உள்ளக் குகையில்

இருட்டே இருந்தால்

உலகமும் இருளாம்...


விளக்கை ஏற்றினேன்

வெடித்துச் சிரித்தது பேரொளி

கிர்..ர்ர்..கிர்

என்ன இரைச்சல்?

ஏனிந்தச் சுழற்சி?


ஒரு ஈ

சுற்றது!சுற்றிச் சுற்றி,

சுழன்று மோதி,

விழுந்து எழுந்து,

மேலும் சுற்றிச் சுற்றி மயங்குது.

குருட்டு ஈ

குருட்டில்லை எனினும்

வழி புரியலை அதுக்கு!


வல்லிக்கண்ணன்
57
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/59&oldid=1192737" இலிருந்து மீள்விக்கப்பட்டது