பக்கம்:அமுதும் தேனும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

22


தானத்தில் நிதானத்தில் சமாதா னத்தில்
தத்துவத்தில் தர்க்கத்தில் கணக்கில், கல்வி
ஞானத்தில் சிறந்தவனாம் எல்லோ ருக்கும்
நல்லவனாம் தமிழ்த்தாயு மான னென்பான்,
வானத்து முகில்சூழ்ந்த நிலவாம் அந்த
மணிமகுடப் பெண்ணரசி அழைப்பை ஏற்றுச்
சேனைக்கோர் ஆணையிடும் அரசாங் கத்தில்
சிறப்புமிகு பெரும்பதவி வகித்து வந்தான்.

அருச்சனையில் பிரச்சினைகள் எழாத காலம்
அக்காலம் என்றாலும், நாட்டில் வேறு
பிரச்சினைகள் தோன்றும்போ தெல்லாம் அந்தப்
பெண்ணரசி அவனைத்தான் அழைத்துக் கேட்பாள்.
நெருக்கடிகள் தீர்வதற்கும், அமைதி ஆங்கே
நிலவுதற்கும் தக்கபல வழிகள் சொல்வான்.
திருத்தமின்றி அவன்கருத்தை ஏற்றுக் கொண்டு
சிற்றிடையாள் அரசியலில் வெற்றி காண்பாள்.

வெற்றிபெறச் செயவல்ல தாயு மானான்
விவேகத்தை அவள்நினைந்து வியப்பாள்; அன்னோன்
சொற்பொழிவைத் தவறாது கேட்டுக் கேட்டுச்
சுவைத்திடுவாள்; அவனியற்றும் கவியி லுள்ள
கற்பனையை மெச்சிடுவாள்; அவனை நேரில்
காணுகின்ற போதெல்லாம் புகழ்ந்து ரைப்பாள்.
தற்பெருமை கொண்டவளோ ஒவ்வோர் நாளும்
தன்னையவன் தழுவுதல்போல் கனவு காண்பாள்.