பக்கம்:அமுதும் தேனும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெந்நீரில்

வெந்தவன்


அவன்கவிஞன்;அவன்பெயரோ அகில்கான்;சொல்லை
அமுதாக்கும் அவள்பெயரோ ஜபுஉன் னிஸ்ஸா,
அவளுக்கும் அவன்மீது காதல்; டில்லி

அமைச்சர்மகன் அவனுக்கும் அவள்மேல் காதல்.

அவளுக்கோ நினைவாற்றல் அதிகம்; காதல்

அதிபதிக்கோ பேச்சாற்றல் அதிகம்; ஆங்கே

அவன்வருவான் எதற்காக? அதற்கா கத்தான்!

ஆரணங்கும் வந்திடுவாள் அதற்கா கத்தான்!


அன்றொருநாள் அவன்வந்தான். அவளும் வந்தாள்.

அரண்மனையின் பின்புறத்தில் சந்தித் தார்கள்.

"இன்றுமுதல் இளவேனிற் பருவ"மென்றான்.

"இலுப்பைமரம் இங்கினிமேல் பூக்கு"மென்றாள்.

"தென்னையிலே செவ்விளநீர் இரண்டைக் காணோம்;

திருட்டுத்தான் போயிருக்க வேண்டு" மென்றான்.

என்னருமைக் காதலரே! அவற்றைத் தென்னை

எனக்கன்றோ பரிசளித்து விட்ட தென்றாள்.