பக்கம்:அமுதும் தேனும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

56



"அளந்தளந்து கட்டிவைத்த மண்ட பத்தில்
அசைந்தசைந்து நடப்பவளே! நிலவை யாரோ
பிளந்தெடுத்து விட்டெறிந்த கார ணத்தால்
பிறைவடிவாய் வானத்தில் மிதக்கு"தென்றான்.
“வளர்பிறையில் நெற்கதிர்கள் நன்கு முற்றும்;
மாந்தருடல் தனில்ரத்தம் சுரக்கு மென்றாள்.
தளர்பிறையாம் தேய்பிறையில், களிமண் பாண்டம்
சரியாகச் சூளையிலே வேகா" தென்றான்.

"தேய்பிறையின் வெளிச்சத்தில், உள்ளிப் பூண்டும்,
சிறுகிழங்கும் மிகநன்கு வளரு"மென்றாள்.
"வாய்சிவந்த பைங்கிளியே! மூங்கில் தன்னை
வளர்பிறையில் வெட்டுவது கூடா" தென்றான்.
ஒய்வெடுத்துக் கொண்டிருந்த நிலவு, மீண்டும்
உலாவந்து விட்டதென்றாள். "உச்சிக் குன்றில்
போய்ப்படுக்கும் வெண்ணிலவின் வெளிச்சம், நம்மைப்
போன்றோர்க்கு நாள்தோறும் தேவை” என்றான்.

பகல்நேரம் காதலர்க்குப் பகைதான் அந்தப்
பகல்நேரம் ஆந்தைக்கும் பகைதான் என்றாள்.
நகராத மலைச்சாரல் மலரே! மேகம்
நனைவதில்லை எனினுமது நகரு மென்றான்.
அகலாத விண்மீன்வெண் ணிலவைத் தேடி
அலைவதில்லை என்றாலும் அசையும் என்றாள்.
முகலாயச் சக்ரவர்த்தி மகளே! கோழி
முட்டையது பிறந்தவுடன் அசையா தென்றான்.