பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

நூலகத்தில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். செசில் பீடன் என்பவர் ’எனது மனங்கவர்ந்த மாது’ (My Fair lady) என்னும் நாடகத்திற்காக உடை பற்றிய குறிப்புக்களை இந் நூலகத்திலிருந்துதான் பெற்றுக் கொண்டார். ஆல்பிரட் லண்ட் என்பவர் .சேக்ஸ்பியர் நாடகம் நடத்தும்பொழுது இந் நூலகத்தால் பெரிதும் பயன் அடைந்தார். இங்ஙனமே இந் நூலகத்தின் இசைப் பகுதியும் இயன்ற அளவு உதவி செய்து வருகிறது. இங்கு பீடோவெனின் பிஜித் தீவுகளின் நாட்டுப் பாடல்களும் கிடைக்கின்றன. பல வரலாற்றுப் பேரறிஞர்களுக்கு இந் நூலகத்தின் அமெரிக்க வரலாற்றுப் பகுதி சொந்த இல்லம்போலவே திகழ்ந்து வருகிறது. அமெரிக்க வரலாற்றிலோ அன்றி வரலாற்றிலோ, புகழ் மிக்க 'புலிட்சர்' பரிசு பெற்றவர் யாவரும் இந் நூலகத்திலன்றி வேறு எங்கும் சென்று ஆராய்ச்சி செய்யவில்லை. எந்த வினாவிற்கும் இந் நூலகத்தின் துணைகொண்டு விடை காணலாம். ஒரு தடவை திரைப்படத் தயாரிப்பாளர் 'வான் காக்' (Von gogh) பற்றிய பொருளைக் கலைப் பகுதியில் கண்டு கொண்டனர். சிகாகோ உலகச் சந்தையில் வைக்கவேண்டிய மாதிரிப் படகுச் சக்கரம் (Ferris wheel) தயார் செய்யும் முறையை, குழந்தைகள் நூல் எழுதுவோர் இந்நூலகத்திலிருந்து பெற்றுக்கொண்டனர். ஜியார்ஜ் வாசிங்டன் கவர்னராக இருந்தபொழுது எழுதியுள்ள குறிப்பினின்று பீர் (beer) தயாரிக்கும் முறையை ஒரு சிலர் அறிந்து கொண்டனர். வாழ்க்கை வரலாறு எழுதுவோரும், கதை எழுதுவோரும் இந் நூலகத்தைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

இந் நூலகத்திற்குச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியவை இந் நூலகத்தில் ஏதாவது ஒரு மூலையில் அவசியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்