பக்கம்:அமைதி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


கண்டு அமைதியுபதேசம் அடைந்து விடலாம்’ என்ற நம்பிக்கை பிறந்தது. சோலையிலே ஒதுங்கிநிற்கிறான். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல அரசன் வருகிறான். ஆட்சித்திறம் பற்றிய சூழ்ச்சித் தொல்லையால் அவன் மனத்தில் கவலைப்புயல் சுற்றி யடிக்கிறது. பகைக்கோட்டை பற்றியெரிகிறது. அரசனுடைய மானமும், தற்பெருமையுமாகிய சருகுகள் சூழ்ச்சிச் சுழல்காற்றில் அகப்பட்டு வானமளவும் உயர்ந்து சுழல்கின்றன இந்த நிலையில் அரசன் வருகிறான்.

அரசனைக் கண்டதும் இவன் மனத்தில் சந்தேகம். அங்கு ஆனைமேற்கண்ட அரசனுடைய மகிழ்ந்த முகம் எங்கே? இவனது ஏக்கம் பிடித்தமுகம் எங்கே? இருந்தாலும் நெருங்குவோம். கேட்போம் என்று எண்ணி அணுகுகிறான். கால்களில் வீழ்கிறான். அரசனுக்கோ அந்தப்புரச் சோலையில் வந்ததால் ஆறாதகோபம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/10&oldid=1771596" இலிருந்து மீள்விக்கப்பட்டது