பக்கம்:அமைதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

"யாாடா நீ ?"

“அரசே! நான் ஒரு பரம ஏழை. ஆனால் திருடனல்ல; கொலைகாரனல்ல; அமைதியை நாடியலைகின்றேன். இன்றுகாலை பவனி வரும்போது தங்களை வீதியிற் கண்டேன். தங்களிடம் அமைதியும் ஆனந்தமும் நிலவின. அதனைக் கற்றுக் கொண்டு போகலாம் என்றுதான் வந்தேன்.ஆதரித்தருள வேண்டும் அரசே!”.

“என்ன! அமைதியா!என்னிடத்திலா! அப்பா நான் சர்க்கரை பூசிய விஷம். இன்பம் பூசிய துன்பம். என்னிடம் அமைதிபூசிய அலைச்சலே இருக்கிறது. ஒருகணமும் அமைதியை நான் கண்டதில்லை. என்னுடைய மனைவியையும் நம்பாது என்மனம் அலைகிறது மந்திரியை நம்பாது அலைகிறது. மக்களை நம்பாது நடுங்குகிறது. என்னுடைய அலைந்த மனம் நல்லவர்களைக் கெட்டவர்களாக எண்ணுகிறது. கெட்டவர்களை நல்லவர்களாக எண்ணி ஏமாறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/11&oldid=1771600" இலிருந்து மீள்விக்கப்பட்டது