இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
சூழ்ச்சிக்காரர்கள் சுற்றியிருந்துகொண்டே சொல்லுக்குச் சொல் கூழைக் கும்பிடு போட்டுக் குடியைக்
கெடுக்கிறார்கள். அப்படியிருக்க என்னிடத்திலா
அமைதி படிக்க வந்தாய்! எங்காவது உனக்கு அமைதி
கிட்டுமானால் என்னையும் மறந்துவிடாதே. எனக்கும்
வந்து கற்றுக் கொடு. உன்னைப்போல இந்த விஷயத்தில் இவ்வளவு ஊக்கமுடையவனைக் கண்டதேயில்லை.
நீ யொரு பரம சாது.போய்வா” என்று அனுப்புகிறான் அரசன்.
வந்த வறியவன் இவ்வளவு செல்வம் நிறைந்த இடத்திலேயே - செல்வாக்கு நிறைந்த இடத்திலேயே- எடுப்பார் பிடிப்பார் ஏத்துவார் உள்ள இடத்திலேயே அமைதி கற்றுக்கொள்ளமுடியவில்லையானால் வேறு எங்கே போவது; என்று திரும்புகிறான். கடை வீதி வழியாகச் செல்கிறான்.
எதிரிலே ஏட்டுக்கட்டைத் தோளில் சுமந்த ஒருவர் வருகிறார். வாயிலே பாட்டு வழிகிறது. ஆதலால்