பக்கம்:அமைதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


இவரிடம் அமைதி நிறைந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறான்.

“ஐயா தாங்கள் பெரிய படிப்பாளி போலிருக் கிறதே!”

“ஆம். என்னவோ மகா வித்துவான் என்று இந்த ஊரில் என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளுவார்கள். “பிரதிவாதி பயங்கரம்,” “ஞானசூரியன்” “சகலாகம சாஸ்திரவித்” என்றெல்லாம் பலபட்டங்கள் உண்டு; அதைப்பற்றி இப்போதென்ன! தாங்கள் யார்? என்னைப் பின்தொடர்ந்து வரக் காரணம் என்ன?”

“ஒன்றுமில்லை. என்மனம் என்னசெய்தாலும் அமைதியின்றி அலைந்து கொண்டேயிருக்கிறது. அமைதியிருக்கும் இடமும், அடையும் வழியும் தேடி வருகிறேன். அரசனிடம் சென்றேன். அங்கொன்றும் கிடைக்கவில்லை. தங்களிடம் கேட்டுத் தெரியலாம் என்று எண்ணுகிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/13&oldid=1771603" இலிருந்து மீள்விக்கப்பட்டது