இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
“அப்படியா இதென்ன பிரமாதம். கலியுலகத்தில் திரிபவர்க்குக் கவலையேது? கற்பனையுலகம்
சுவர்க்கந்தான். வயிற்றுப் பசியுந் தெரியாமல்
வருணனை யமுதத்தை வாரிவாரிக்
குடித்தால் அமைதி, தானே வந்து விடும். கொஞ்சம் அந்தவழியில் முயற்சிப்பது தானே!”
“தாங்களே கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு வழிகாட்டுங்கள்.”
“ஏது இவன் விடமாட்டான் போலிருக்கிறதே ; சொல்லித்தொலைத்தால் போகமாட்டான் போலிருக்கிறதே. உண்மையைச் சொல்லித் தொலைப்போம்.”
“என்ன ஐயா யோசிக்கிறீர்கள். எப்படியாவது உபதேசித்துத்தான் ஆகவேண்டும்.”
“நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நான் ஓயாமல் படித்துக் கொண்டுதானிருக்கிறேன்.