இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
ஆனாலும் அமைதியில்லை. ஓயாப் படிப்பு ஒழியாக்
கவலையாய்த் தானிருக்கிறது. படிக்கப் படிக்கப் படியாமை தோன்றுகிறது. அதனால் மேலும் மேலும்
கிளர்ச்சியும் எழுச்சியுமே நான் கண்ட முடிவுகள்.
ஆகையால் நீ என்னிடமா அமைதியை நாடுகிறாய்!
எங்காவது புலியினிடம் ஜீவகாருண்யம் கற்கப்
போகலாமா! பொறாமைக்காரனிடம் பொறுமை
கற்கப் போகலாமா? திருடனிடம் அடைக்கலம் புகலாமா’ எண்ணிப்பார். என்னிடம் எல்லாம் வெளி
வேஷமான அமைதிதான். என்னைக்கண்டு ஏமாறாதே!
வேறு எங்காவது போய்க் கற்றுக்கொள். இது
உண்மை.”
“என்ன!என்ன! இங்குமா தோல்வி! எல்லாம் அப்படித்தானோ! என் முயற்சி சாகாத வீட்டில் வெள்ளைக்கடுகு வாங்கச் சென்றபார்ப்பனியின் கதையாகப் போய்விடுமோ! ஆயினும்.... பார்ப்போம். ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’, ‘முயற்சி