பக்கம்:அமைதி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

திருவினையாக்கும்’, ‘முயன்றால் முடியாப்பொருளுளவோ?’ முயன்றுபார்ப்போம். என்று எண்ணிக் கொண்டே ஒரு ஆற்றங்கரையோரமாகப் போய்க் கொண்டிருக்கிறான்.

வழியில் ஒருமணல்மேடு. அதன்மேற் தழைத்த முந்திரி மரங்கள் நிழல் செய்கின்றன. அதன் பக்கத்தில் சிறுதென்னந்தோப்பு. அதிற் குடும்பச்சொத்தாகியமுருங்கமரம் மூன்று நிற்கின்றன. அதன் ஓரத்தில் ஒருசிறுகுடிசை. குடிசைத் திண்ணையொன்றில் கோழிக்குஞ்சுகளின் நடுவே அதன் தாய்க்கோழியும் சேவலும். அவைகள் தங்கள் மொழியில் என்னவோ பேசிக் கொள்கின்றன. குஞ்சுகள் சுற்றிச்சுற்றி வருகின்றன. ஒரு திண்ணையில் பத்துக் குழந்தைகள். அவற்றின் நடுவில் தாயும் தந்தையுமாக இருவர் இருந்தனர். அவர்கள் நிலையிலும் கவலையில்லை. பொறாமையில்லை, சூழ்ச்சியில்லை, துன்பமில்லை என்று தோன்றுகிறது இவனுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/16&oldid=1771613" இலிருந்து மீள்விக்கப்பட்டது