இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13
அவர்கள் கையிருப்பெல்லாம் உடலில் உறுதியும்
மனத்தில் ஊக்கமும், பானையில் காலைக்கஞ்சியுமே.
அதற்குள் அவர்கள் மன அமைதியடங்கியிருக்கிறது.
இதனை இவன் கண்டானா? அவர்களை யணுகி “மிக
மகிழ்ச்சியாக இருக்கிறாப்போல் இருக்கிறதே இந்த
இரகசியத்தைக் கொஞ்சம் சொல்லிக் கொடுக்க
கூடாதா?” என்றான்.
“ஆம்எங்களிடம் அமைதியிருக்கிறது. ஆனந்தம் இருக்கிறது.எது வரையில்? எங்கள் பானை காலியாகும் வரையில். காலையில் வேலைகிடைக்கும் வரையில். வேலைக்குக் கூலி கிடைக்கும் வரையில். பெற்ற கூலிக்கு வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்கள் கிடைக்கும் வரையில் அதற்குமேல் நாங்களும் உங்களைப்போலத்தான். எங்களிடமா முழுஅமைதி. கற்கவந்தீர்'.
இவ்வளவு நிலை தெரிந்தும் இவர்கள் கலங்கவில்லையே! மலர்ச்சியிருக்கிறதே! இவர்களிடம்