இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
அமைதியில்லையா? ஆம் முழுஅமைதியில்லை. காலையில் அமைதியிருக்கிறது. மாலையில் அமைதியிருக்
கிறது. இடையே கலக்கமும் இருக்கிறது.
ஆனால் அவ்வமைதி நிலைத்ததாக இல்லையே! நிலைத்த அமைதியை நாடுவது எங்கே! என்ற பெரு முயற்சி பிறந்தது. மேற்கே போகிறான். தண் பொழில் நடுவே தவமுதியோரொருவர் தகதகவென விளங்குகின்ற மேனியொடு சடை தாழக் கவலை என்பது சிறிதுமின்றி ஒளிமுகம் வீச எதனையோ உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். அவரைக்கண்டதும் இவன் மனம் அளவிலா ஆனந்தம் கொண்டது. ஆழமான ஆற்றைப்போல இவர்மனம் கலங்கவில்லை என்பதை இவர் முகம் காட்டுகிறதே. ‘இவரிடம் தான் அமைதியை நாடவேண்டும்’ என்று அணுகினான்.
அவரோ சித்தத்தைச் சிவன்பாலே வைத்து உட்கார்ந்திருந்தார். அவர் நிட்டை கலையும் வரையில் பக்கத்தில் நின்றுகொண்டே இருந்தான். அவர் கண்