இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15
விழித்த நேரமும் இவன் காலில் விழுந்த நேரமும்
ஒன்றாயிருந்தது.
“அன்பனே! எழுந்திரு; என்னவேண்டும்?”
“சுவாமி! ஒருபெரும் பொருளை நாடிஅரசனிடம் சென்றேன்; அறிஞனிடம் சென்றேன்; உழவனிடம் சென்றேன் ஓரிடத்திலும் முற்றும் அடைந்தேனில்லை. இங்கே வந்ததும் என் மனம் என்னவோ மகிழ்ச்சிக்கடலில் முக்குளிக்கிறது. அதனால் நான் தேடிவந்த பொருள் இங்கேயே இருக்கிறது என்று துணிந்தேன்.”
“அப்பா! நீ தேடிவந்ததைச் சொல்லாமல் என்னவெல்லாமோ சொல்லுகிறாயே.”
“சுவாமி! உலகமெல்லாம் ஒடியாயிற்று. எங்கும் அமைதியைக்காணோம். அமைதிச்செல்வம் இருக்கும் இடத்தை அறிவிக்கவேண்டும். ”