பக்கம்:அமைதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


“அதுவா; தோண்டப்படாத ஆழமான இடத்தில், மிகமிக அகலமான இடத்தில், மிகமிக நீளமான இடத்தில், குறையாமலே நிறைவான இடத்தில், மலையை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறது. நீயறியவேண்டுமானால் தாழத்தாழச் சுருங்கிச்சுருங்கிப் போக வேண்டும்”.

“சுவாமி! தாங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே; சித்தர்கள் செய்த வைத்திய நூல் மாதிரி இருக்கிறதே, விளங்கச் சொல்லவேண்டும்”.

“அதுதான் கடலைவிட ஆழமும், உலகத்தை விடப்பரப்பும், எங்கும் நிறைவும், உயர்வும் உடைய பொருள்; அது தான் கடவுள்பொருள். அதனைத்தான் எண்ணிப் பார்த்து வருகிறேன். அதனால்தான் என்னிடம் சிறிது அமைதிஇருக்கிறது.நீ முயன்றால் முழுதும் பெறலாம். இவ்வளவு தூரம் தேடிவந்த உனக்கு அதனை அடைவதும் பெரிதல்ல; விடாப்பிடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/20&oldid=1771619" இலிருந்து மீள்விக்கப்பட்டது