இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
யாக முயற்சிசெய்;ஆனால் உன் அமைதிக்கு முயற்சிக்குப் பங்கம் விளையக்கூடியதாகச் சிலபோராட்டங்கள் உன்மனத்துக்குள்ளேயே நிகழும். அடிக்கடி உன் சூழலின் பழக்கத்தால், சுற்றியிருப்போருடைய உபதேசத்தால் உன்மனம் அமைதிதந்த ஆண்டவனை
மறக்கவும் செய்யும். ‘கடவுளாவது கிடவுளாவது
கடவுளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு.மனிதன்
உழைப்பே எல்லா இன்பத்தையும் ஆக்குகிறது. ஆதலால், மனிதன் உழைப்பை நம்பியே வாழவேண்டும்.
உழைப்பே ஊதியம்’ என்றெல்லாம் சிலர் உபதேசிப்பார்கள். இந்த உபதேசம் காலத்திற்கு ஏற்றதாக
இருக்கும். எப்போதும் வரம்பில்லா ஒன்று இனிப்பாகத்தானே இருக்கும். அதில் ஏமாந்து விடாதே;
வானமிடிந்தாலும் மண்கம்பமானாலும் தெய்வம் உண்டென்ற நம்பிக்கை தளரக்கூடாது. உறுதியே உயர்வளிக்கும். உறுதி யில்லையானால் உள்ளதும் பலிக்காது. ஆதலால் தெய்வம் உண்டென்றிரு. அதுவும்ஒன்றென்றிரு.