பக்கம்:அமைதி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


இனி, இரண்டாவதாக நீ என்னதான் அமைதித் தெய்வத்தை மனத்திற்குள்ளேயே காண்பவனாக இருந்தாலும், ஆலய வழிபாடு செய்யத்தான்வேண்டும். அப்படிச் செய்யச் செல்கின்றகாலத்து, கோயிலுக்குள் நுழைந்தது முதல் பலவேறு திருவுருவங்களைக் காண்பாய். அப்போது சமயம் பார்த்திருந்த உன் மனம் உன்னைச் சந்தியிலிழுத்துவிட முயற்சிக்கும். என்னையா? எத்தனைசாமி. இத்தனைச் சாமியையும் மனிதன் வணங்கவேண்டுமா? என்ற ஒருபெரிய சந்தேகத்தைக் கிளப்பிவிடும். கிளப்பி உன் அமைதியைக் குலைக்கும். நீ கொஞ்சம் ஏமாந்தாய் ஆனால் இவ்வளவு நாள் அரும்பாடுபட்டுத் தேடின அமைதி இருந்த இடம் தெரியாது மறைந்து போகும். அப்போது நான் சொல்வதை மனத்தில் மறவாது வைத்துக்கொள். இறைவனுக்கு வடிவம் இல்லை; வடிவம் இல்லாதபோது பெயரும் இல்லை. தொழிலும் இல்லை. ஆனால் இப்படி அமைந்த வடிவம் முதலியஎல்லாம் உயிர்களாகிய நம்மீதுவைத்த பெருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/22&oldid=1771622" இலிருந்து மீள்விக்கப்பட்டது