பக்கம்:அமைதி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

கருணையினால் விளைந்தனவே. வீரம் வேண்டி வழிபடுகின்றவர்களுக்கு வீரனாக, மணம் வேண்டி வழிபடு கின்றவர்களுக்கு மணவாளனாக, குழந்தை வேண்டி வழிபடுகின்றவர்களுக்குக் குழந்தைவேலனோடு கூடிய சோமாஸ்கந்த மூர்த்தியாக எல்லாம் இருக்கின்றார். “உருமேனிதரித்துக்கொண்டது என்றல் நம்தம் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு” என்று சித்தியார் என்னும் ஞான நூல் சொல்லும். ஆதலால் ‘பலவடிவம்கொண்டதும்’ பலபெயர் கொண்டதும், படைத்தல் முதலிய தொழில்களைச்செய்வதும் நம்மை உய்விக்கும் பொருட்டே என்பதை உறுதியாய்க் கொள்ளவேண்டும்.

மூன்றாவதாக, தன்னை ஒரு உத்தியோகஸ்தனாக நினைக்கச் சட்டையும் தலைப்பாகையும் எவ்வாறு அவசியமோ; ஒருபெண் ஒருவனுக்குரியவளாவள் என்பதையறிய எப்படித் தாலியும் மஞ்சளும் அவசியமோ? அப்படியே; என்னதான் தெய்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/23&oldid=1771623" இலிருந்து மீள்விக்கப்பட்டது